கோ பஸ்ட் (Go First) விமான நிறுவனம் திவாலாகிவிட்டதால் அந்நிறுவனத்தின் அனைத்து பயணிகள் விமானங்களும் மே 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோ பஸ்ட் (Go First) விமான நிறுவனம் தாங்கள் திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கோ பஸ்ட் விமான நிறுவனம் பயணிகள் விமான சேவையை இன்று முதல் 3 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் கோ பஸ்ட் நிறுவனத்தின் அனைத்து விமான சேவையும் நிறுத்தப்படுகிறது. கோ பஸ்ட் நிறுவனத்திற்கு பி அண்ட் டபுள்யூ இண்டர்னேஷனல் ஏரோ எஞ்சின் என்ற அமெரிக்க நிறுவனம் விமான எஞ்சின் வழங்கி வந்தது. அண்மைக் காலத்தில் அந்த நிறுவனம் வழங்கிய எஞ்சின்கள் அதிகம் பழுதடைந்துள்ளன. அவற்றை சரிசெய்வதற்குத் தேவையான பணம் கையிருப்பில் இல்லாத நிலையில் விமான சேவையை தொடர முடியவில்லை எனகோ பஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகளுக்கு தண்டனை! உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
Due to operational reasons, GoFirst flights for 3rd, 4th and 5th May 2023 have been cancelled. We sincerely apologise to our loyal customers. Please visit https://t.co/qRNQ4oQROr for more information. We assure that we’ll be back with more information soon. pic.twitter.com/QAJlL017QS
— GO FIRST (@GoFirstairways)மேலும், பங்குதாரர்களின் நலன் கருதியே திவால் நோட்டீஸ் வழங்கியதாக கோ பஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. திவால் அறிவிப்பைத் தொடர்ந்து கோ பஸ்ட் நிறுவனம் விமான சேவை தொடர மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் இண்டிகோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அந்நிறுவனத்திடம் 56 சதவீதம் பங்குகள் இருக்கிறது. அடுத்த இடத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திடம் 8.9 சதவீத பங்குகள் உள்ளன. 8.7 சதவீத பங்குகளுடன் விஸ்தாரா மூன்றாவதாக உள்ளது. கோ பஸ்ட் விமான நிறுவனம் 6.9 சதவிகித பங்குகளுடன் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
இலங்கை மட்டுமில்லை அமெரிக்காவும் அதை நோக்கித்தான் செல்கிறது! கடன் சுமையால் திண்டாட்டம்!