மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா உருவாகி வருகிறது: PwC-USAIC அறிக்கை

By Dhanalakshmi GFirst Published May 3, 2023, 2:22 PM IST
Highlights

"இந்தியாவில் மருத்துவ பரிசோதனை வாய்ப்புகள்" என்ற தலைப்பில் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்  மற்றும் அமெரிக்க இந்திய வர்த்தக சபை இணைந்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.  

இந்த கூட்டு அறிக்கையின்படி, பல முக்கிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்தியா சாதகமான இடமாக உருவாகி வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. முதன் முதலில் இந்த ஆய்வு அறிக்கை மே 3 ஆம் தேதி அமெரிக்க இந்திய வர்த்தக சபை பயோபார்மா ஹெல்த்கேர்  உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது.

பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்ஸின் குளோபல் ஹெல்த் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் சுஜய் ஷெட்டி கூறுகையில், ''2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகள், உலகளாவிய பல முக்கிய ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் காரணமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பல தரப்பட்ட மக்கள் தொகை, இத்துடன் வேகமாக முன்னேறும் சுகாதார உள்கட்டமைப்புடன் இணைந்து, மருத்துவ பரிசோதனைகளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவுடன் உலகளாவிய தலைசிறந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திட்ட ரீதியான கூட்டணியை அமைக்க சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 3720 பேருக்கு தொற்று உறுதி

பயோஃபார்மா நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள தனியார் சுகாதார அமைப்பில் முக்கியமான கண்டுபிடிப்புகளை செயல்படுத்துடன், நாட்டில் வேகமாக விரிவடைந்து வரும் சுகாதார உள்கட்டமைப்பைப் பயன்படுத்தவும் செய்யலாம்'' என்றார்.

தனியார் துறைக்கான வாய்ப்பு குறித்து அமெரிக்க இந்திய வர்த்தக சபை தலைவர் கருண் ரிஷி கருத்து தெரிவிக்கையில், ''இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளில் அதிகரித்து வரும் ஆர்வம், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் வலுவான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனியார் பயோஃபார்மா நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களுடன், திறமையான மற்றும் செலவு குறைந்த மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்வதற்கு பயோஃபார்மா நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி  நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை உருவாக்கும் காலக்கெடுவை விரைவுபடுத்தலாம். தங்கள் ஆராய்ச்சியின் செயல்திறனை அதிகரிக்கலாம். மேலும், தேவைப்படும் நோயாளிகளுக்கு புதுமையான சிகிச்சைகளை செயல்படுத்தலாம். இறுதியில் உலகளாவிய சுகாதாரத்தை மேம்படுத்தலாம்'' என்றார்'

இன்று இந்த இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கப்போகுது.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

click me!