மத்திய அரசுப் பணிகளுக்கு நேரடி நியமன முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது.
மத்திய அரசுப் பணிகளுக்கு நேரடி நியமன முறை தொடர்ன சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் மத்திய அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மத்திய அரசு பணிகளுக்கு யுபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகிறது. நுழைவு தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 நிலைகளாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் நபர்கள் மத்திய அரசு பணிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
நேரடி நியமன முறை சர்ச்சை?
undefined
ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக பணியாளர்களை நியமிக்கும் முறையை அறிவித்து இதற்கான விளம்பரத்தையும் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இணை செயலாளர், இயக்குனர் மற்றும் துணை செயலாளர் உள்ளிட்ட 45 பணியிடங்களுக்கு நேரடி நியமன முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது.
ஆனால். இந்த பணியிடங்கள் அனைத்தும் அரசாங்கத் துறைகளுக்குள் முக்கியமான முடிவெடுக்கும் பொறுப்புகள் ஆகும். யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கும் இருக்கும் நபர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது தனியார் துறையில் தகுதி உள்ள நபர்களுக்கும் இந்த பதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
உங்க பேங்க் அக்கவுண்டுக்கு 2000 ரூபாய் வரப்போகுது.. எப்போ தெரியுமா?
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறாதவர்களும் மத்திய அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கப்படும் முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் நேரடி நியமன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதே நேரம் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்களை நேரடியாக மத்திய அரசுப் பணிகளில் நியமிப்பது சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் நேரடி முறையில் தேர்வு செய்யப்படும் நியமனங்கள் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கான நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடின.
இந்த நிலையில் மத்திய அரசு பணிகளுக்கு நேரடி நியமன என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுபிஎஸ்சி தலைவருக்கு, மாநிலப் பணியாளர்கள், பொதுக் குறைகள் அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார்..
தயவு செய்து இங்கே வந்துறாதீங்க.. கையெடுத்து கும்பிடும் வயநாடு அதிகாரிகள்- காரணம் என்ன.?
நேரடி நியமன முறை என்றால் என்ன?
இந்திய நிர்வாக சேவை (IAS) போன்ற அரசு பணிகளுக்கு பாரம்பரிய இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு பதில் வெளியே இருந்து அல்லது தனியார் துறையில் இருந்து ஆட்களை நிரப்புவதாகும். நேரடி முறையில் நியமனம் செய்யப்படும் இந்த நபர்கள், நடுத்தர மற்றும் மூத்த நிலை பதவிகளை நிரப்புவதாகும். பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தின் போது இந்த செயல்முறை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது, 2018 இல் முதல் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. மூத்த அதிகாரத்துவப் பொறுப்புகளில் மூத்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தல்
பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள், செயல்திறன் மற்றும் அரசாங்கத் தேவைகளின் அடிப்படையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. புதிய திறமைகளை அதிகாரத்துவத்தில் புகுத்துவதையும், சிக்கலான நிர்வாகம் மற்றும் கொள்கைச் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான சிறப்புத் திறன்கள் கிடைப்பதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று மத்திய அரசு கூறியது.
எனினும் நேரடி நியமன முறை என்பது முற்றிலும் புதியது அல்ல; 1950 களில் இருந்து மூத்த நிலை பதவிகளை நிரப்புவதற்கு இந்த முறையை அரசு பின்பற்றி வந்தது. 2000 களின் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது கூட இது முன்மொழியப்பட்டது.
2005 இல் நிறுவப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC), இந்திய நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது, சிறப்பு அறிவு தேவைப்படும் பாத்திரங்களை நிரப்ப தனியார் துறை, கல்வித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்ய பரிந்துரைத்தது.
2018 முதல், மோடி அரசாங்கம், ARC இன் பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, குறிப்பாக நடுத்தர நிர்வாக மட்டத்தில், நேரடி நியமன முறை உத்தியை செயல்படுத்தியுள்ளது.