வயநாடு நிலச்சரிவு; உதவி தொகையை கூட விட்டு வைக்காத வங்கிகள் - முதல்வர் அதிருப்தி

By Velmurugan sFirst Published Aug 19, 2024, 4:52 PM IST
Highlights

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையில் வங்கிகள் கடன் தவணைத் தொகைகளை பிடித்தம் செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவில் சிக்கி 230 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் மாயமாகினர். பலரும் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையில் வங்கிகள் தங்களுக்கான கடன் தவணைகளை பிடித்தம் செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளா அரசு சார்பில் உடனடி தேவைகளுக்காக ரூ.10 ஆயிரம் உதவித் தொகையானது அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இந்த பணத்தில் வங்கிகள் தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகைக்கான தவணையை பிடித்தம் செய்துள்ளதாகக் கூறி மாநில கூட்டுறவு அமைச்சர் வாசவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Latest Videos

மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை; அரசுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் இது தொடர்பாக கூறுகையில், வீடு கட்டவும், வீட்டினை மறு சீரமைப்பு செய்யவும் கடன் பெற்றிருந்தோம். ஆனால், தற்போது வீடே இல்லாத சூழலில் கடன் தொகைக்கான தவணையை செலுத்தி உள்ளோம். மாநில அரசின் உதவித் தொகை வந்ததுமே ரூ.5 ஆயிரம் வரை கடன் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; நாம் தமிழர் நிர்வாகி அதிரடி கைது

இந்நிலையில் வங்கிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், “நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து வங்கிகள் தொடர்ந்து மாதாந்திர தவணைகளை வசூலித்து வரும் நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் கடும் அதிருப்தியை தெரிவித்த அவர், இது தொடர்பாக சாதகமான முடிவை எடுக்குமாறு SLBCயை வலியுறுத்தி உள்ளார்”.

click me!