திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து…..என்றைக்கு வரை தெரியுமா?

First Published Apr 20, 2018, 10:04 AM IST
Highlights
vip dharsan cancel upto july 16th in tiruppathy


கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையடுத்து திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன்ம ரத்து செய்யப்பட்டள்ளது. நாளை முதல் ஜுலை 16 ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் வாடகை அறை, விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு, ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டையை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் விஐபி சிபாசிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறை என்பதால் தற்போது பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். எனவே, திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வாரத்தில் மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், நாளை முதல் ஜூலை மாதம் 16-ம் தேதி வரை விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!