Adani:அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு

By Pothy Raj  |  First Published Feb 7, 2023, 3:35 PM IST

அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.5400 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் வழங்கும் டென்டரை உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது.


அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.5400 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் வழங்கும் டென்டரை உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லுகள், மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியீட்டுக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் மோசமாகச் சரிந்து வருகின்றன. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எப்பிஓ-வை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

எல்ஐசி- நிறுவனத்துக்கு கடந்த 5 நாட்களில் ரூ.65,400 கோடி இழப்பு: பங்கு மதிப்பு மளமளவென சரிவு

இந்த சம்பவத்தால் உத்தரப்பிரதேச அரசு, அதானி குழுமத்துக்கு வழங்கியி இருந்த ரூ.5400 கோடி டெண்டரை நேற்று ரத்து செய்துள்ளது. டெண்டர் கோரியதில் மிகவும் குறைவான தொகை கேட்டிருந்தது அதானி குழுமம்தான், அதனால்தான் அந்தநிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டிருந்தது. இப்போது டெண்டர் தொகையை குறைவாக கோடிட்டிருந்த அதானி குழுமத்துக்கே அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் மத்யான்ஞ்சல் வித்யூத் வித்ரன் நிகம் லிமிடட்(MVVNL) 75 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் வாங்க அதானி குழுமத்துக்கு டெண்டர் கோரியிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் டெண்டரை ரத்து செய்கிறோம் என்று அரசு சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் பொருத்துவதற்கான டெண்டரை எம்விவிஎன்எல் நிறுவனம் கோரியிருந்தது. டெண்டரில் போட்டியிட்ட அதானி டிரான்ஸ்மிஷந் நிறுவனம் ஒரு மீ்ட்டருக்கு ரூ.10ஆயிரம் கோடிட்டிடருந்தது. டெண்டர் கோரிய லார்சன் அன்ட் டூப்ரோ, ஜிஎம்ஆர் நிறுவனங்களைவிட அதானி நிறுவனம் கோரிய தொகைதான் மிகக் குறைவாகும்.

கௌதம் அதானியின் அசுர வளர்ச்சியும் அதள பாதாள வீழ்ச்சியும்

இது தொடர்பாக எம்விவிஎன்எல் கடந்த 4ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் “ ஸ்மார்ட் மின் மீட்டர் வழங்குவதற்காக கோரப்பட்டிருந்த டெண்டர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது” என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏன் டெண்டர் ரத்து செய்யப்படுகிறது, காரணம் என்ன, புதிய டெண்டர் விடப்படுமா, என்ற எந்தத்தகவலும் இல்லை.

அதிகாரிஒருவர் கூறுகையில் “ டெண்டரை யார் ரத்து செய்தது, ஏன் ரத்து செய்தார்கள் என்பதே புதிராக இருக்கிறது. அரசியல்ரீதியாக எடுக்கப்பட்ட முடிவா அல்லது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவா என்பது தெரியவில்லை. வரும் 10 முதல் 12ம் தேதிவரை மாநிலத்தி் மெகா முதலீட்டு மாநாட்டை முதல்வர் ஆதித்யநாத் நடத்த உள்ளநிலையில் இந்த டெண்டர்ரத்து செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் எம்விவிஎன்எல் டெண்டரை ரத்து செய்துள்ளநிலையில் அதன் துணை நிறுவனங்களான தக்சினாஞ்சல் வித்யூத் வித்ரம் நிகம், பூர்வாஞ்சல் வித்யூத் வித்ரன் நிகம், பஸ்சிமஞ்சல் வித்யுத் வித்ரம் நிகம் லிமிட் ஆகியவையும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்த டெண்டர் கோரியுள்ளன. அந்த டெண்டரும் விரைவி்ல் ரத்தாகும் எனத் தெரிகிறது
 

click me!