Maharashtra Politics:மகாராஷ்டிரா காங்கிரஸில் குழப்பம்!சட்டசபைத் தலைவர் பதவியிலிருந்து பாலசாஹேப் தோரட் ராஜினாமா

By Pothy RajFirst Published Feb 7, 2023, 2:04 PM IST
Highlights

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாலசாஹேப் தோரட் சட்டசபைத் தலைவர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாலசாஹேப் தோரட் சட்டசபைத் தலைவர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், மாநிலத் தலைவர் நானா படோலுக்கும் பாலசாஹேப் தோரட் அனுப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழைகளின் நலனை மையமாக வைத்தே பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி பேச்சு

மாநிலத் தலைவர் நானா படோலுக்கும், பாலசாஹேப் தோரட்டுக்கும் இருந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததால்தான் தோரட் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில நாசிக் மண்டலத்தில் கடந்த 2ம் தேதி நடந்த எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தோரட் மைத்துனர் சுதிர் தாம்பே அறிவிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.

ஆனால், ஆனால்,தோரட்டின் வளர்ப்பு மகன் சத்யஜித் தாம்பே யேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரின் வளர்புத்தந்தைதான் பாலசாஹேப் தோரட். இந்த தேர்தல் முடிந்ததில் இருந்து பாலசாஹேப் தோரட்டுக்கும், நானா படோலுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ்... அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் தீவிரமான விசுவாசியான பாலசாஹேப் தோரட், மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியிலும் அமைச்சர் பொறுப்பை தோரட் வகித்துள்ளார்.

காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் “ மாநிலத் தலைவர் நானா படோலுக்கும், தோரட்டுக்கும் இடையே உரசல் இருந்துவந்தது. இதில் வெளிப்படையாகவே நானா படோல் தன்னையும், தனது குடும்பத்தினரையும் படோல் விமர்சிக்கிறார் என்று தோரட் குற்றம்சாட்டினார். தன்மீது கடும் கோபத்தில் படோல் இருப்பதாக தோரட் குற்றம்சாட்டினார்” எனத் தெரிவித்தனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மாநிலத் தலைவர் நானா படோல் மறுத்துவிட்டார். தோரட் கூறும் சிறுபிள்ளைத்தனமான செயல்களில் எல்லாம் நான் ஈடுபடமாட்டேன், என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் தோரட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று நானா படோல் தெரிவித்துள்ளார்.

click me!