நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது! எதிர்க்கட்சிகள் அவைக்குத் திரும்பினர்: ஆம் ஆத்மி பிடிவாதம்

By Pothy RajFirst Published Feb 7, 2023, 1:22 PM IST
Highlights

அதானி குழும விவகாரத்தால் கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

அதானி குழும விவகாரத்தால் கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

இதையடுத்து, மக்களவையில் குடியரசுத் தலைவர்உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு போன்றவற்றை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த வாரம் வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. 

இந்த அறிக்கைக்குப்பின், அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு பங்குச்சந்தையில் மளமளவெனச் சரிந்து வருகிறது. கடந்த 8 நாட்களில் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா - முதல் கட்ட நிவாரணம் விமானம் மூலம் புறப்பட்டது

அதானி குழும பங்குச்சந்தை மோசடியை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அதானி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும், அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடி தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் அல்லது, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

கடந்த 3 நாட்களாக அவை நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் முடக்கியதால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் ஏதும் அவையில் நடக்கவில்லை. இந்நிலையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அவை நடவடி்ககைகளையில் பங்கேற்க முடிவு செய்தனர்.

பீகாரில் மட்டும்தான் இப்படி நடக்குமா! 2கி.மீ தொலைவுக்கு ரயில் தண்டவாளம் திருட்டு: ரயில்வே விசாரணை

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நின்று தென் மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான மவுலானா அபுல்கலாம் ஆசாத் கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை மீண்டும் செயல்படுத்தக் கோரி தென் மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். 

ஆனால் அதானி விவகாரத்தை அவையில் விவாதிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ராஷ்டரிய சமிதி கட்சி எம்.பி.க்கள் மட்டும் அவையைப் புறக்கணித்தனர்.

15 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் நாடாளுமன்ற அவை நிகழ்ச்சியில் பங்கேற்க எம்.பி.க்கள் முடிவு செய்தனர்.

ஏழைகளின் நலனை மையமாக வைத்தே பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நாடாளுன்ற அவை நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்ட விசாரணை, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை என்ற கோரிக்கை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட்டத்தில் பங்கேற்றனர்.


 

click me!