பீகாரில் மட்டும்தான் இப்படி நடக்குமா! 2கி.மீ தொலைவுக்கு ரயில் தண்டவாளம் திருட்டு: ரயில்வே விசாரணை

By Pothy RajFirst Published Feb 7, 2023, 11:29 AM IST
Highlights

பீகார் மாநிலத்தில் 2 கி.மீ தொலைவுக்கு ரயில்வே இருப்புப் பாதையை சிலர் திருடிச் சென்றுள்ளனர். இந்த ரயில்வே இருப்புப்பாதையை ரயில்வே பாதுகாப்புப்படை உதவியுடன் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 2 கி.மீ தொலைவுக்கு ரயில்வே இருப்புப் பாதையை சிலர் திருடிச் சென்றுள்ளனர். இந்த ரயில்வே இருப்புப்பாதையை ரயில்வே பாதுகாப்புப்படை உதவியுடன் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பீகாரின் சம்ஸ்திபூர் ரயில்வே மண்டலத்துக்குரிய லோஹத் சுகர் மில் மற்றும் பந்துவல் ரயில்நிலையத்துக்கு இடையே ரயில்வே இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில்வே இருப்புப்பாதை நீண்டகாலமாக பயன்பாட்டில்இல்லாமல் அப்படியேவிடப்பட்டது.

ஏழைகள் மீதான மோடி அரசின் சத்தமில்லா தாக்குதல்தான் பட்ஜெட்’: சோனியா காந்தி விளாசல்

இந்நிலையில் ஏறக்குறைய 2 கி.மீ தொலைவுக்கு ரயில்வே இருப்புப்பாதையை தற்போது காணவில்லை. அங்கிருந்த தண்டவாளத்தை ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களுடன் சிலர் பழைய இரும்பு கடையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து சம்ஸ்திபூர் ரயில்வே மண்டல மேலாளர் அசோக் அகர்வால் கூறுகையில் “ 2 கி.மீ தொலைவுக்கு ரயில் தண்டவாளத்தைக் காணதாதது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜான்ஜிஹர்பூர் ஆர்பிஎப் ஸ்ரீனிவாஸ் மற்றும் மதுபானி ரயில்வே ஆர்பிஎப் ஜமாதர் முகேஷ் குமார் சிங் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆர்பிஎப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ரயில்வே தண்டவாளத்தை முறையாக ஏலத்தில் விட்டுவிற்பனை செய்யாமல் ஆர்பிஎப் ஊழியர்கள் முறைகேடாக பழைய இரும்பு வியாபாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தார்பங்கா ஆர்பிஎப் மற்றும் ரயில்வே ஊழில் ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் பதவி ஏற்பு முழுவிவரம் என்ன?: எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது

கடந்த ஆண்டு பீகாரின அமியவார் ஆற்றின் குறுக்கே இருந்த ஆங்கிலேயர் காலத்துக்கு இரும்பு பாலத்தை இரவோடு இரவாக ஒரு கும்பல் வெட்டி எடுத்துச்சென்றனர். இந்த பாலத்தின் எடை 500 டன் இருக்கும். இந்த பாலத்தை வெட்டி எடுத்தபோது பொதுமக்கள் கேட்டபோது பொதுப்பணித்துறையினர் பொய் கூறி அந்த பாலத்தையே ஒரு கும்பல் திருடிச் சென்றது

கர்ஹாரா ரயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எஞ்சினின் பாகங்கள் ஒவ்வொன்றாக கழற்றி ஒரு கும்பல், ரயில் எஞ்சினையே கடந்த ஆண்டு நவம்பரில் திருடிச் சென்றனர். 2023, ஜனவரி மாதத்தில் பாட்னாவில் ஒரு மொபைல் போன் டவரை ஒரு கும்பல் வெட்டி எடுத்துச்சென்றனர். இப்போது ரயில் தண்டவாளத்தை ஆர்பிஎப் போலீஸார் உதவியுடன் ஒரு கும்பல் வெட்டி எடுத்துச் சென்றுள்ளது. இதுபோன்று வித்தியாசமான திருட்டுகள் பீகாரில்மட்டும்தான் நடக்கின்றன


 

click me!