ஏழைகளின் நலனை மையமாக வைத்தே ஒவ்வொரு பட்ஜெட்டையும் மத்திய அரசு தாக்கல் செய்கிறது என்று பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் நலனை மையமாக வைத்தே ஒவ்வொரு பட்ஜெட்டையும் மத்திய அரசு தாக்கல் செய்கிறது என்று பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்தபின் நடக்கும் பாஜகவின் முதல் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்றுநடந்தது.
உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் பதவி ஏற்பு முழுவிவரம் என்ன?: எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில் “ தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக யாரும் கூறவில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி முழு பட்ஜெட்இதுதான்.
இந்த பட்ஜெட் முழுமையாக ஏழைகளின் நலனை மனதில் வைத்தும், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களை மனதில் வைத்தும் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சித்தாந்தரீதியாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் கூட இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்.
நகர்ப்புறத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தயாராகி வருவது, ஏற்பாடுகளை பார்த்த வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியாவை பாராட்டிச் சென்றுள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்யத் தயாராக இருக்கிறது. முதல்கட்ட உதவிகள் துருக்கிக்கு சென்றுள்ளன. இந்தியாவில் இருந்து மீட்டுப்படையினரும் துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளது.
உலகளவில் எரிசக்தி துறை முதலீட்டுக்கு சிறந்தநாடு இந்தியா! முதலீ்ட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
2001ம் ஆண்டு குஜராத்தில் பூஜ்நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நினைத்துப் பார்கிகறேன். இந்த துயரம் மிகப்பெரியது, அந்த துயரத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்” என மோடி தெரிவித்தார்” என அமைச்சர் தெரிவித்தார்