உபி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி எப்போது? - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

First Published Dec 29, 2016, 4:53 PM IST
Highlights


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வரும் 4-ந்தேதி இந்திய தேர்தல்ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்தியாவின் மிப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு முதலில் தேர்தல் நடைபெற இருக்கிறது.அதோடு பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் தேர்தலை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநிலத்திற்கும் தேர்தல் ஆணையர்களை நேரில் அனுப்பி தேர்தல் நடத்துவற்கான ஆயத்தபணிகளைமேற்கொண்டது. தற்போது தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிந்து தேர்தல் நடத்த தயாராகியுள்ள நிலையில் நேற்று தேர்தல் நடைபெறும் ஐந்துமாநிலத்தின் மத்திய அமைச்சக செயலர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

அந்த கடிதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேபுத்தாண்டு விடுமுறை முடிந்த பின்னர் வரும் ஜனவரி 4-ந்தேதி ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு 7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

click me!