sanjay nishad:கோயில்களுக்கு அருகிலுள்ள மசூதிகள் தாமாகமுன்வந்து அகற்றப்பட வேண்டும்: உ.பி. அமைச்சர் விஷப்பேச்சு

By Pothy Raj  |  First Published Sep 15, 2022, 4:25 PM IST

கோயில்களுக்கு அருகே இருக்கும் மசூதிகள் தாமாக முன்வந்து அகற்றப்பட வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயில்களுக்கு அருகே இருக்கும் மசூதிகள் தாமாக முன்வந்து அகற்றப்பட வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிஷாத் கட்சியின் தலைவராக இருப்பவர் சஞ்சய் நிஷாத். உ.பி. அரசில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். பாக்பத் நகரில் உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ எங்கெல்லாம் கோயிலுக்கு அருகே மசூதி இருக்கிறதோ அங்கிருந்து தாமாக முன்வந்து மசூதிகள் அகற்றப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். 

Tap to resize

Latest Videos

பாலினப் பாகுபாடே காரணம் ! ஆண்-பெண் வேலைவாய்ப்பில் 98% இடைவெளி: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

ராமர் கோயில் விவகாரத்தில் நடந்ததைப் போல் நடக்க வேண்டும். ராமர் கோயில் எந்தவிதமான இடையூறுமின்றி கட்டப்படுகிறது, மசூதி கட்டவும் தனியாக இடம் வழங்கப்பட்டுள்ளது.

நாம் நகரத் தேவையில்லை. பிறமதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்களை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். 
மாநிலத்தில் மதரஸாக்களை சர்வே செய்ததில், மதரஸாக்கள் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. தீவிரவாதிகள் ஏராளமானோர் பலமுறை மதரஸாவில் பிடிபட்டுள்ளனர். 

இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு ! வெளிநாடுகளில் வங்கி, தூதகரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தல்

மதரஸாவை சர்வே செய்வதற்கும் முஸ்லிம் மதத் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான், அதன் தோற்றம் தெளிவாகும். எதிர்க்கட்சிகள் மதவெறியைப் பரப்பி, மவுலானாக்களுடன் இணஐந்து கலவரத்தை தூண்டிவிடுகிறார்கள்

உத்தரப்பிரதேத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் கலவரம் நடப்பது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கெரியில் 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தல்; உ.பி. அரசை விளாசிய பிரியங்கா காந்தி

நாட்டில் ஏழ்மை மவுலானாக்களால் அதிகரித்துவிட்டது, அவர்களால்தான் முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. முஸ்லிம் குழந்தைகள் யாரும் கல்வி கற்கக்கூடாது, விழிப்புணர்வு பெற்றுவிடக்கூடாது என்று மவுலானக்கள் நினைக்கிறார்கள்.

இவ்வாறு நிஷாத் தெரிவித்தார்

click me!