திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

By Dhanalakshmi G  |  First Published Sep 15, 2022, 4:23 PM IST

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்த விசாரணையில், ''பாகல மண்டலம் பட்டிப்படிவாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத்துக்கும், மதனப்பள்ளி சந்திரா காலனியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 12ம் தேதி (திங்கட்கிழமை) திருமணம் நடந்ததுள்ளது. முதலில் காதலித்த போது பெரியவர்கள் இவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்து வைத்துள்ளனர். 

Latest Videos

திருமணத்திற்கு பின், குடும்ப பெரியவர்கள் சம்பிரதாயப்படி முதல் இரவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில், துளசி பிரசாத் தனது அறையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இறந்த துளசி பிரசாத்தின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மணமகன் இறந்ததால் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!