75 ஆண்டுகளுக்குப்பின், நமிபியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 8 சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. இதற்காக சிறப்பு விமானம் நமிபியா இன்று சென்றடைந்தது.
75 ஆண்டுகளுக்குப்பின், நமிபியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 8 சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. இதற்காக சிறப்பு விமானம் நமிபியா இன்று சென்றடைந்தது.
இந்தியா கொண்டுவரப்படும் 8 சீட்டா சிறுத்தைப் புலிகளும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட உள்ளன.
கடந்த 1952ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவிலிருந்து சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் அழிந்துவி்ட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சீட்டா ரக சிறுத்தைப்புலிகள் இந்தியா கொண்டுவரப்படுகின்றன
இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு ! வெளிநாடுகளில் வங்கி, தூதகரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தல்
நமியாவின் வின்ட்ஹாக் நகரிலிருந்து இந்தியத் தூரகம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ சிறப்பு விமானம் நமியாவை அடைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண தூதர்களான சிறுத்தைகள் இந்தியா வரும்”எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வரும் 8 சீட்டாக்களில், 5 பெண் சீட்டா சிறுத்தைப் புலிகளும், 3 ஆண் சிட்டா ரக சிறுத்தைகளும் அடங்கும். இந்த சீட்டா சிறுத்தைப் புலிகள் வரும் 17ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்பூரை சென்றடையும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷோப்பூர் மவாட்டத்தின் குனோ தேசிய பூங்காவுக்குச் செல்லும்.75 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா வந்துள்ள சீட்டா புலிகளை பிரதமர் மோடி வரும் 17ம் தேதி திறந்துவிட உள்ளார்.
சீட்டா சிறுத்தைகளை அழைத்துவர நமிபியா சென்றுள்ள சிறப்பு விமானத்தில் கூண்டுகளை வைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் முகப்பில் சிறுத்தைப்புலியைப் போன்று படம் வரையப்பட்டுள்ளது. நமிபியாவிலுந்து 16 மணிநேரம் தொடர்ச்சியாகப் பறந்து இந்தியாவுக்கு விமானம் வர உள்ளது.
உ.பி. லக்கிம்பூர் கெரி தலித் சகோதரிகள் பலாத்காரக் கொலையில் 6 பேர் கைது
சீட்டா சிறுத்தைப் புலிகள் விமானத்தில் பயணிக்கும் 16மணிநேரமும் வெறும் வயிற்றில் அழைத்துவரப்படும். விமானப் பயணத்தில் ஏதேனும் உடல்நலக்கோளாறு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.