CUET UG 2022 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மதிப்பெண் பட்டியல் பதவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே

By Thanalakshmi VFirst Published Sep 15, 2022, 2:01 PM IST
Highlights

CUET UG 2022: மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான சியுஇடி தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

CUET UG 2022: மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான சியுஇடி தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முடிவுகள் வெளியானவுடன் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கல்விகொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை CUET என்னும் பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 6 கட்டங்களாக சியுஇடி தேர்வு நடைபெற்றது. 

மேலும் படிக்க:நீட் முதுகலை கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமானவை.. விவரம் இங்கே..

நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் 54,555 இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் அமைந்துள்ள 489 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் கடந்த செப்.8 ஆம் தேதி சியுஇடி தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு என்டிஏ-வால் வெளியிடப்பட்டது. உத்தேச விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கும் வகையில் செப்.10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (CUET) முடிவுகள் இன்று (15.09.2022 0 வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று இரவு 10 மணிக்குள் சியுஇடி முடிவுகள் என்டிஏ- வால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cuet.samarth.ac.in.வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் தேர்வர்கள், CUET விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த செப். 13 முதல் இன்று காலை 10 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு முடிவுகள் அடிப்படையில், நாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும்,  இளநிலை படிப்பை வழங்க இருக்கும் மாநிலம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:போக்குவரத்து கழகத்தில் NCRTCயில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ..

விண்ணப்பதாரர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் இருக்கும் CUET UG 2022 result என்ற  இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், விண்ணப்ப பதிவெண், பிறந்த தேதி ஆகிவற்றை சமர்ப்பித்தால், CUET UG 2022 மதிப்பெண் பட்டியல்  திரையில் தோன்றும் . பின்னர் அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

click me!