” உங்களுக்கு சூனியம் பற்றி தெரியாது” தகனம் செய்யும் போது, பாதி எரிந்த உடலை சாப்பிட்ட இருவர் கைது..

By Ramya sFirst Published Jul 14, 2023, 11:16 AM IST
Highlights

ஒடிசாவில் இறந்தவரின் உடலை தகனம் செய்யும் போது பாதி எரிந்த சடலத்தை சாப்பிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நடந்த இறுதிச் சடங்கில், எரிந்து கொண்டிருந்த இறந்தவரின் உடலில் இருந்து பாதி எரிந்த மனித சதையை இருவர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பழங்குடியின கிராமமான பந்தாசாஹியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சுந்தர் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் இதுகுறித்து பேசிய போது “ பந்தாசாஹி கிராமத்தைச் சேர்ந்த மதுஸ்மிதா சிங், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் உடலை தகன மைதானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இருப்பினும், தகனம் செய்யும் போது, அங்கு குடிபோதையில் இருந்த இருவர், எரிந்து கொண்டிருந்த உடலை எடுத்து அதனை 3 துண்டுகளாக வெட்டினர். அவற்றில் ஒரு துண்டை தங்களிடம் வைத்திருந்தனர், மற்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன.” என்று தெரிவித்தனர்.

உயிரிழந்த மதுஸ்மிதா சிங்கின் மாமா லபா சிங் இதுகுறித்து பேசிய போது “ சதையை என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு, சுந்தர் உங்களுக்கு சூனியம் பற்றி தெரியாது என்று கூறினார். சிறிது நேரம் கழித்து, பாதி எரிந்த சதையை அவர் சாப்பிடத் தொடங்கினார். இதனால் கிராம மக்கள் இருவரையும் சரமாரியாக அடித்து, உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். சுந்தர் மற்றும் நரேந்திரன் இருவரும் தவறை ஒப்புக்கொண்டனர்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஹைட்ரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 24 வயது நபர், வயதான பெண்ணைக் கொன்று அவரது சதையை உட்கொண்டதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியைப் போலவும் ஆக்ரோஷமான முறையில் நடந்து கொண்டதாகவும். அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் காவல்துறையினர் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹத்னிகுண்ட் தடுப்பணையால் டெல்லிக்கு இன்று மிகப்பெரிய ஆபத்து; தத்தளிக்கும் டெல்லி!!

click me!