பழைய ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!

By Manikanda Prabu  |  First Published Jul 14, 2023, 9:58 AM IST

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மகிழ்ச்சிகரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது


டிசம்பர் 22, 2003 அன்று தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்.பி.எஸ்.) அமல்படுத்துவதற்கான அறிவிப்புக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட காலிப் பணியில் சேர்ந்த அகில இந்தியப் பணியாளர்களுக்கு ( All India Service personnel) பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் ஒரு முறை விருப்பத்தை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேரும்போது, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஊழியர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த ஒரு முறை விருப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

அதாவது, டிசம்பர் 22, 2003 அன்று தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்புக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் சேர்ந்த மற்றும் ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு சேரும், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் அகில இந்திய பணியாளர்கள் ஒரு முறை விருப்பத்தை தேர்வு செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான ஊழியர்களுக்கு ஜனவரி 31, 2024க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்படும், அதன்பின்னர், அவர்களின் என்பிஎஸ் கணக்குகள் மார்ச் 31, 2024க்குள் மூடப்பட்டு விடும்.

இதுதொடர்பாக, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், AIS (அகில இந்திய சேவை) (DCRB) விதிகள், 1958இன்படி, டிசம்பர் 22, 2003 அன்று தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்.பி.எஸ்.) அமல்படுத்துவதற்கான அறிவிப்புக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட காலிப் பணியில் சேர்ந்த ஏஐஎஸ் அதிகாரிகள், ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வருபவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) விதிகளின் கீழ் காப்பீடு பெற ஒரு முறை விருப்பத்தை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு 2003, சிவில் சர்வீஸ் தேர்வு 2004 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு 2003 ஆகிய அறிவிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஐஎஸ் அதிகாரிகள் இந்த விதிகளின் கீழ் வருவதற்கு தகுதியுடையவர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற பல்வேறு நீதிமன்றங்கள் அனுமதித்த நிலையில், AIS (DCRB) விதிகளின் 1958 இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அகில இந்தியப் பணியாளர்கள் (All India Service personnel), அந்த பணியில் சேர்வதற்கு முன்னர், CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 (இப்போது 2021) அல்லது வேறு ஏதேனும் விதிகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட மத்திய அரசுப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர்களும் மார்ச் 3, 2003 தேதியிட்ட d/o P&PW O.M இன் விதிகளின் கீழ் தகுதியுடையவர்கள் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, AIS (DCRB) விதிகள், 1958 இன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு  செய்வதற்கான ஒரு முறை விருப்பத்தைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.

இஸ்ரோவின் கனவு திட்டம்! இன்று விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3! உற்று நோக்கும் உலக நாடுகள்..!

ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறுவது தொடர்ச்சியான சேவைதான் எனவும், தொழில்நுட்ப ரீதியில் ராஜினாமாவுக்கு அவை உட்பட்டத்து எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல்களின்படி, அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் விருப்பத்தேர்வு, அவர் எந்த மாநில கேடரில் உள்ளாரோ அந்த மாநில அரசிடம் சமர்பிக்கப்பட எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தேவைப்பட்டால், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையிடம் கேட்டு தெளிவு பெறலாம். அதேபோல், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்திடமும், இந்திய வன சேவை உறுப்பினர்கள் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையிடமும் கேட்டு தெளிவு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களின்படி, நவம்பர் 30, 2023க்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஒரு முறை விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த ஒருமுறை விருப்பத்தைப் பயன்படுத்தத் தகுதியுடைய அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மட்டுமே வருவார்கள். இந்த ஒருமுறை பயன்படுத்தப்படும் விருப்பம் இறுதியானது.

தகுதியான ஊழியர்களுக்கு ஜனவரி 31, 2024க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்படும், அதன்பின்னர், அவர்களின் என்பிஎஸ் கணக்குகள் மார்ச் 31, 2024க்குள் மூடப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகள் அந்தந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக பேசியது. மேலும், மத்தியப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

click me!