1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட நிழல்உலக தாதா தாவுத் இப்ராஹிம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) தெரிவித்துள்ளது.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட நிழல்உலக தாதா தாவுத் இப்ராஹிம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் தாவுத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி ஷாகீல் ஷேக் என்ற சோட்டா ஷகீல் குறித்த விவரம் வழங்குவோருக்கு ரூ.20 லட்சம் பரிசும், உதவியாளர்கள் ஹாஜி அனீஸ் என்ற அனீஸ் இப்ராஹிம் ஷேக், ஜாவித் படேல் என்ற ஜாவித் சிக்னா, இப்ராஹிம் முஸ்தாக் அப்துல் ரசாக் மேமன் என்ற டைகர் மேமன் குறித்து தகவல் அளித்தால் ரூ.15 லட்சமும் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு பல முயற்சிகளை எடுத்துவருகிறது ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் டி கம்பெனி மீது என்ஐஏ வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தாவுத் இப்ராஹிம் சர்வதேச தீவிரவாதியாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளார். தாவுத் இப்ராஹிம் தீவிரவாத செயல்களை செய்யவே டி கம்பெனி என்ற நெட்வொர்க்கையும் உருவாக்கியுள்ளார்.
பணிப்பெண்ணை சித்திரவதை செய்த புகாரில் சீமா பத்ரா கைது... இது பொய்யான குற்றச்சாட்டு என கூச்சல்!!
இதில் அனீஸ் இப்ராஹிம் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேமன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றத்தில் மட்டுமல்லாது, கடத்தல், போதை மருந்து கடத்தல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், ஹவாலா மோசடி, தீவிரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுகல், தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது , அல் கொய்தா ஆகியவற்றுக்கு நிதி உதவி திரட்டுதல், ஆட்களை சேர்த்தல் ஆகிவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்போடு நெருங்கிய தொடர்பிலும் இருந்துள்ளனர்.
மரத்தில் கட்டிவைத்து ஆசிரியருக்கு அடி, உதை: தேர்வில் தேர்ச்சியடைய வைக்காததால் மாணவர்கள் ஆத்திரம்
இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.