சோனியா காந்தி தாயார் மறைவு..! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published : Sep 01, 2022, 12:47 PM IST
சோனியா காந்தி தாயார் மறைவு..! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் பாவ்லா மைனோ மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

சோனியா காந்தி தாயார் மரணம்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். காங்கிரஸ் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இந்தியாவின் குடியுரிமையை பெற்ற அவர், ராஜீவ் காந்தி மரணமடைந்து சில ஆண்டுகள் கழித்து கடந்த 1998 ஆம், ஆண்டு முதல் தற்போது வரை காங்கிரஸ் தலைவராக உள்ளார். இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ வயது(90) உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து சோனியா காந்தி கடந்த வாரம் தனது தாயாரை சந்திக்க இத்தாலிக்கு சென்றிருந்தார்.

சோனியா காந்தியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்… டிவிட்டரில் கட்சி நிர்வாகிகள் இரங்கல்!!

இத்தாலி சென்றிருந்த சோனியா காந்தியுடன், அவரது மகன் ராகுல் காந்தியும் , மகள் பிரியங்கா காந்தியும் சென்றிருந்தனர். இந்தநிலையில்,  ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் செவ்வாய் கிழமை நடைபெற்றுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்,

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உங்கள் அன்புத் தாய் திருமதி பாவ்லா மைனோ காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள முதலமைச்சர், தங்களது தாயாரின் இழப்பால் துயரப்படும் உங்களுக்கும், எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ..? யார் அந்த 3 பேர்..? அதிர்ச்சியில் இபிஎஸ்

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!