காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்துக்காக சாலையின் இருபுறங்களிலும் பிளெக்ஸ் போர்டு, பேனர்கள் வைக்கப்பட்டிருந்தும் அதை போலீஸாரும், அரசு துறைகளும் கண்களை மூடிக்கொண்டு செயல்படுவது ஏன் என்று கேரள உயர் நீதிமன்றம் விளாசியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்துக்காக சாலையின் இருபுறங்களிலும் பிளெக்ஸ் போர்டு, பேனர்கள் வைக்கப்பட்டிருந்தும் அதை போலீஸாரும், அரசு துறைகளும் கண்களை மூடிக்கொண்டு செயல்படுவது ஏன் என்று கேரள உயர் நீதிமன்றம் விளாசியுள்ளது.
ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரை சாலை முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு செல்கிறது. குறைவான இடத்தில்தான் வாகனங்கள் செல்கின்றன. இதை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே. விஜயன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தேவன் ராமச்சந்திரன் நேற்று மாலை உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு
நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஹரிஸ் வாசுதேவனும் ராகுல் காந்தி ஊர்வலம் குறித்த புகைப்படங்கள், சாலையின் இரு புறங்களிலும் வைக்கப்பட்ட பேனர்கள், பிளெக்ஸ், கொடிகள் ஆகியவற்றின் புகைப்படங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை நீதிபதியிடம் வழங்கினார்.
அதன்பின், நீதிபதி தேவன் ராமச்சந்திரன் நேற்று பாரத் ஜோடோ யாத்திரை குறித்து அரசையும், போலீஸாரையும் கண்டித்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால்,அவர் உத்தரவில் காங்கிரஸ் கட்சி பெயரோ, ராகுல் காந்தி பெயரோ வரவில்லை. அவர் கூறியதாவது
நமது சூழியலை காப்பது குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பது அவசியம்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
எதிர்கால தேசத்தின் பொறுப்பாளர்களாக இருக்கும் நபர்கள், நிறுவனங்கள் யாரும் தகுதிவாய்ந்த அதிகாரிகள், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்காதது வேதனையாக இருக்கிறது.
குறிப்பிட்ட அரசியல் கட்சி சட்டவிரோதமாக திருவனந்தபுரம் முதல் திருச்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பேனர்கள், பளெக்ஸ், கொடிகளை வைக்கிறது. போலீஸ் அதிகாரிகள், மற்ற துறைகளின் உயர் அதிகாரிகள் இது சட்டவிரோதம் என முழுமையாக அறிந்திருந்தும், கண்ணை மூடிக்கொண்டுதான் பணியாற்றுகிறார்கள்.
எந்த ஒரு விளம்பரமும், விளம்பர நிறுவனமும் விளம்பரம் செய்யும் போது அதன் பெயர் இல்லாமல், முகவரி இல்லாமல் விளம்பரம் செய்வது சட்டவிரோதமானது. அவ்வாறு இருந்தால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்று உத்தரவுகளை நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது, மாநில அரசும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, சாலைப் பாதுகாப்பு ஆணையமும் குறிப்பிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ள. இவை அனைத்தையும் அதிகாரிகளுக்கு நினைவூட்டுவது அவசியமாக இருக்கிறது என்பது வியப்பாகஇருக்கிறது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை: கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சாலையின் இரு பகுதிகளிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பதாகைகள், பிளெக்ஸ், போஸ்டர்களால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக முடியும். அவர்களின் கவனத்தை சிதறடிக்கும்போது, விபத்து ஏற்படும் சாத்தியம் உள்ளன. இதுபோன்ற பல சம்பவங்களும் நடந்துள்ளன.
இதுபோன்று பேனர்கள், போஸ்டர்கள் வைக்கும்போது, அதிலிருந்து ஏராளமான கழிவுகள் உருவாகின்றன. இதை உள்ளாட்சி அமைப்புகளாலோ அல்லதுதகுதி வாய்ந்த நிறுவனங்களாலோ கையாள முடியாத நிலையும் ஏற்படுகிறது.இது போன்ற விஷயங்களை ஏன் அதிகாரிகள் அறியவில்லை என்பதை நினைத்து நீதிமன்றம் வியக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் பதில் அளிக்க வேண்டும். சட்டவிரோத பேனர்கள், போஸ்டர்களை ஏன் நீக்கக்கூடாது என்பதற்கும் பதில் அ ளிக்கவேண்டும்”
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்