pm narendra modi: நமது சூழியலை காப்பது குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பது அவசியம்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Published : Sep 23, 2022, 12:22 PM IST
 pm narendra modi: நமது சூழியலை காப்பது குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பது அவசியம்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சுருக்கம்

நமது சூழியலை பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு கற்பிப்பிப்பது அவசியமானது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து  பிரதமர் மோடி தெரிவித்தார்

நமது சூழியலை பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு கற்பிப்பிப்பது அவசியமானது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து  பிரதமர் மோடி தெரிவித்தார்

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிஎப்ஐ ஹர்தாலுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

இன்றும் நாளையும்(23,24தேதி) நடக்கும் இந்த மாநாட்டில், மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து, குறிப்பாக காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளுதல், விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் காடுகளின் பரப்பை அதிகப்படுத்துவது, காடுகளை அழித்தலைத் தடுப்பது குறித்தும் காட்டுவிலங்குகள் வேட்டையாடுதல், அவற்றின் வாழிடங்களை பாதுகாத்தல் ஆகியவை குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. 6 செஷன்களில் பல்வேறு விதமான தலைப்புகளை எடுத்து இந்த மாநாடு அலசி ஆய்வு செய்யஇருக்கிறது.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை திறம்பட கையாளுதல், வனவிலங்கு பாதுகாப்பு, காடுவளர்ப்புமற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை சமாளித்தல், காற்று மாசைக் கட்டுப்படுத்துதல் போன்ற தலைப்புகளில் பேசப்படுகின்றன.

மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி

இந்த மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துபேசியதாவது:
இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை அறியவும், வெற்றிகரமான தீர்வுகளை நாடு முழுவதும் செயல்படுத்தவும் கேட்கிறேன்.

சுழற்சிப்பொருளாதாரம் என்பது உற்பத்தி, நுகர்வு, பகிர்தல், மறுசுழற்சி, சீர்செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை அடங்கியது.இந்த சுழற்சிப்பொருளாதாரம்  நமது கலாச்சாரம், பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். நமது அன்றாட வாழ்க்கையில் உள்ள இந்த பழங்கங்களை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாக கிர் சிங்கங்கள், புலிகள், யானைகள், ஒற்றை கொம்பு கான்டாமிருகம், சிறுத்தைப் புலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு நமீபியாவிலிருந்து 8 சீட்டா சிறுத்தைப் புலிகள் வந்துள்ளதையும் நாம் வரவேற்கிறோம். இந்தியா அனைத்து மிருகங்களுக்கும் சிறந்த வாழிடமாக உதாரணமாகத் திகழ வேண்டும்.

பணமதிப்பிழப்பின் விளைவுகளைத் தெரிந்தே மோடி அமல்படுத்தினார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கை மூலம், செயலின் விளைவுகளையும், கற்றல் அனுபவத்தையும் ஒருங்கிணைப்பது அவசியம். நமது சூழியலை பாதுகாப்பது குறித்த முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு கற்பிப்பது அவசியம்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!