rahul:Demonetisation:பணமதிப்பிழப்பின் விளைவுகளைத் தெரிந்தே மோடி அமல்படுத்தினார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By Pothy Raj  |  First Published Sep 23, 2022, 9:55 AM IST

பணமதிப்பிழப்பின் விளைவுகள் எப்படியிருக்கு என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் அதை பிரதமர் மோடி கொண்டு வந்தார். வர்த்தகர்களின் நிதி மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.


பணமதிப்பிழப்பின் விளைவுகள் எப்படியிருக்கு என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் அதை பிரதமர் மோடி கொண்டு வந்தார். வர்த்தகர்களின் நிதி மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 150 நாட்கள் நடக்கிறது. இதில் 3500 கி.மீவரை ராகுல் காந்தி நடைபயணம் செல்ல உள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்த நடைபயணம் நேற்று திருச்சூர் மாவட்டத்தை எட்டியது. இந்த நடைபயணத்தில் நேற்று ராகுல் காந்தியுடன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் உடன் சென்றனர்.

அப்போது  கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தார். இதன் மூலம் மக்களிடமும், வர்த்தகர்களிடமும் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கைவசம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை 2016, டிசம்பர் 30ம் தேதிக்குகள் வங்கியில் டெபாசிட் செய்யவும் தெரிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு காலத்தில் மக்கள் சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்தனர். 

பாஜக ரூ.307 கோடி செலவு ! 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வாரி இறைப்பு

சாலக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு குறித்து பேசியதாவது:

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்து, தவறு செய்துவிட்டார் என பலரும் நினைத்தனர். பணமதிப்பிழப்பின் விளைவுகளை மோடி உண்மையில் உணரவில்லை என்றும் தெரிவித்தனர்.

சகோதரிகளே, சகோதரர்களே, அது உண்மையில்லை. பிரதமர் மோடிக்கு பணமதிப்பிழப்பு என்றால் என்ன, அதன் விளைவுகள் என்ன, எப்படி இருக்கும் என்பது தெரியும். இந்திய வர்த்தகர்கள் வைத்திருக்கும் நிதி மீதான தாக்குதல்தான் பணமதிப்பிழப்பு. 

நம்நாட்டின் பணப்புழக்கத்தை அழிக்கவும், உங்கள் வர்த்தகத்தை அழிக்கவும் வடிவமைக்கப்பட்டது. இதுபற்றி நரேந்திர மோடிக்கு நன்கு தெரியும். நீங்கள் சிறுவணிகராக இருந்தால், சிறு ஹோட்டல் நடத்துவராக இருந்தால், சில நாட்களுக்கு உங்களின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தியோ அல்லது நிறுத்தினாலோ உங்கள் கதை முடிந்துவிடும்.  இதை மோடி நன்கு அறிந்திருந்தார்.

அனைத்து வகையான வகுப்புவாதமும் வன்முறையும் சகித்துக் கொள்ள முடியாதது: ராகுல் காந்தி!!

ஜிஎஸ்டி வரியும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் முதுகெலும்பை உடைக்க உருவாக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியும், பணமதிப்பிழப்பும் சேர்ந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களையும், தங்க நகை வியாபாரிகளையும்,அவர்களின் வர்த்தகத்தையும் எந்த அளவு பாதித்தது என்பது உங்களுக்குத் தெரியும். 


இந்த நடவடிக்கை ஏதும் பெரிய தொழில்களை பாதிக்கவில்லை. நாட்டில் 5 முதல் 6 தொழிலதிபர்கள் மட்டும் தொழில் செய்யத்தான் அனுமதிக்கிறார் இதுதான் மோடியின் தொலைநோக்குத் திட்டம். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை முழுமையாக அழித்துவிட வேண்டும். இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மையைச் சந்தித்து வருகிறது. மிகவும் உயர்ந்த பணவீக்கத்தை சந்தித்து வருகிறது.

கேரளாவில் பிஎப்ஐ சார்பில் இன்று ஹர்தால்:பஸ்கள் மீது கல்வீச்சு: போஸீலார் எச்சரிக்கை
நம்முடைய மக்கள் கடனிலும், பணவீக்கத்திலும் வேலையின்மையிலும் மூழ்குகிறார்கள். 2014ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து அகலும்போது இந்தியாவின் கடன் ரூ.50 லட்சம் கோடி, 2022ம் ஆண்டில் நாட்டின் கடன் ரூ.139 லட்சம் கோடி. தனிநபர் ரீதியாக கடனைக் கணக்கிட்டால் ஒவ்வொருவர் தலைக்கும் ரூ.ஒரு லட்சம் கடன் இருக்கிறது


இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

click me!