கேரள பல்கலைக்கழக வேதந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசரச் சட்டத்தின் நகல்களை ஒப்புதல்களுக்காக ஆளுநர் முகமது ஆரிப் கானுக்கு கேரள அரசு அனுப்பியுள்ளது.
கேரள பல்கலைக்கழக வேதந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசரச் சட்டத்தின் நகல்களை ஒப்புதல்களுக்காக ஆளுநர் முகமது ஆரிப் கானுக்கு கேரள அரசு அனுப்பியுள்ளது.
மாநிலத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கி கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இது தொடர்பாக இரு நகல்களை ஆளுநர் மாளிகைக்கு இன்று கேரள அரசு அனுப்பி வைத்தது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கம்: பினராயி அரசு அதிரடி
இந்த அவசரச் சட்டத்தில் சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம்,சூழல் ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரள சட்டப்பேரவை கூட்டப்படாத நிலையில் ஆளுநர் மூலம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும், சட்டம் உடனடியாக நடைமுறைக்குவர வேண்டும் என்பதையும் அதில் கேரள அ ரசு குறிப்பிட்டுள்ளது.
அவசரச் சட்டம் என்பது மாநில அமைச்சரவையின் முடிவு, அவசரச்சட்டம் பிறப்பிக்க அமைச்சரவைக்கு அதிகாரம் இருக்கிறது. மாநில அமைச்சரவை பரிந்துரையின்படி வரைவு அவசரச்சட்டத்தை ஏற்று அவசரச் சட்டத்தை அளுநர் பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அவசரச் சட்டத்தின் இரு நகல்களில் ஒரு நகல் ஆளுநர் செயலாளருக்கும் மற்றொரு நகல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவசரச்சட்டத்தின் நகல் ஆளுநர் ஒப்புதலுக்காக கேரள அரசு அனுப்பி வைத்ததை ஆளுநர் மாளிகையும் உறுதி செய்துள்ளது. அதில், பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி, அனுபவம் மிக்க தேர்ந்த கல்வியாளரை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.
ஆனால், கேரள அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் மோதல் இருக்கும்போது, உடனடியாக ஆளுநர் அவசரச்சட்டத்தை பிறப்பிப்பது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
கேரளாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசுக்கும் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் நீடித்து வந்தது.
பல்கலைக்கழங்களுக்கு, துணை வேந்தர்களை நியமனத்தில் ஊழல்கள் நடந்ததாக ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டினார். கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க குறைந்தபட்சம் 3 பேரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 11 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கும்,11 பேரை மட்டுமே பரிந்துரை செய்த கேரள அரசு குறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. துணை வேந்தர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆளுநர் உத்தரவை ரத்து செய்யவும் மறுத்துவிட்டது. இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானை அந்தப் பதவியிலிருந்து நீக்க கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது.
இதையடுத்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை கடந்த 9ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் அவசரச் சட்டம் 10ம் தேதி பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது