மக்கள் சேவைதான் முக்கியம், அதற்குத்தான் முன்னுரிமைதர வேண்டும். குடும்பத்துக்கு அல்ல என்று தெலங்கானா முதல்வரின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
மக்கள் சேவைதான் முக்கியம், அதற்குத்தான் முன்னுரிமைதர வேண்டும். குடும்பத்துக்கு அல்ல என்று தெலங்கானா முதல்வரின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
தெலங்கானா முதல்வரும், டிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர் ராவுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இதனால் தெலங்கானாவுக்கு 5 முறை பிரதமர் மோடி வந்தபோதிலும் அவரை ஒருமுறைகூட நேரில் சென்று முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்கவில்லை. 5வது முறையாக தெலங்கானாவுக்கு இன்று வந்த பிரதமர் மோடியை நேரில் சென்று சந்திரசேகர் ராவ் வரவேற்கவில்லை.
தெலங்கானாவில் உள்ள ராமகுண்டத்தில் பத்ராச்சலம்-சாத்துப்பள்ளி சாலையில் உள்ள உரம் மற்றும் ரசாயனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
5வது முறையாக பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்
இதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் பெகும்பேட்டை விமான நிலையம் வந்து அங்கிருந்து ராகுண்டம் வந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
என்னிடம் வந்து பலரும் எவ்வாறு நீங்கள் சோர்வடையாமல், கடினமாக உழைக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒருபோதும் சோர்வடையமாட்டேன். ஏனென்றால், தினசரி 2 முதல் 3 கிலோ அளவுள்ள வசைகள், தூற்றல்கள், அவதூறுப் பேச்சுக்களை நான் உண்கிறேன், ஜீரணிக்கிறேன். அந்த வார்த்தைகளை ஜீரணித்து எனக்கு சக்தியாக மற்ற கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார்.
என்னை அவதூறாகப் பேசுங்கள், பாஜகவை அவதூறாகப் பேசுங்கள். ஆனால், இந்த தெலங்கானா மக்களை அவதூறாகப் பேசினால், நீங்கள் கடும் விலை கொடுக்க நேரிடும்.
மக்கள் அதிகமான நம்பிக்கை வைத்திருந்த கட்சி துரோகம் செய்கிறது. ஆனால் நண்பர்களே, 4 பக்கமும் இருள் சூழும் போது, அங்கு தாமரை மலரத் தொடங்கும். ஒரு குடும்பத்துக்கு உழைக்கும் அரசுக்குப் பதிலாக அனைத்துக் குடும்பங்களுக்கும் உழைக்கும் அரசை மக்கள் தேடுகிறார்கள்.
தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை கட்டம் கட்டும் பாஜக! ஜனசேனா, டிடிபியுடன் கூட்டணிக்கு ‘மாஸ்டர் பிளான்’
தெலங்கானாவில் உள்ள பாஜக தொண்டர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சிலர் விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை காரணமாக மோடியை அவதூறு செய்யப் பயன்படுத்துவார்கள். இந்த தந்திரங்களில் சிக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு ஏராளமான திட்டங்களை தெலங்கானா அரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அதை திட்டமிட்டே தெலங்கானா அரசு மறைத்துவிட்டது. சிலர் மூட நம்பிக்கையுடனே அனைத்து முடிவுகளை எடுக்கிறார்கள்.
எங்கு வாழ்வது, அலுவலகத்தை எங்கு அமைப்பது, யாரை அமைச்சராகத் தேர்ந்தெடுப்பது அனைத்தும் மூட நம்பிக்கை அடிப்படையில்தான் எடுக்கிறார்கள். சமூக நீதிக்கு இந்த மூடநம்பிக்கை மிகப்பெரிய தடையாக இருக்கிறது. ஊழல் வழக்குகளுக்கும், விசாரணைக்கும் பயந்து எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து கூட்டணி சேர முயல்கிறார்கள்.
‘வணக்கம் தமிழ்நாடு! மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்’ - நெகிழ்ந்த பிரதமர் மோடி !
தெலங்கானா மாநிலத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது. டிஜிட்டல் பரிமாற்றம், ஆன்லைன் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தி, ஊழலைக் குறைக்க எங்கள் அரசு முயல்கிறது. இதுபோன்ற பரிமாற்றங்களைக் கண்காணிக்க முடியும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது, ஊழலுக்கான வாய்ப்பு குறையும், அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடியான தொடர்பை ஏற்படுத்தும்.
ஜன்தன் திட்டம், ஆதார், மொபைல் ஆகிய 3 திட்டங்கள் மூலம் அனைத்து போலியான பயனாளிகள் நீக்கப்பட முடிந்தது. ஏழைகள் அரசிடம் இருந்து நேரடியாக பணத்தைப் பெற முடிந்தது. இதற்கு முன், பணம் நேரடியாக மக்களுக்கு செல்லாமல் இடைத்தரகர்கள் மூலம் செல்லும்போது மோசடிசெய்யப்படும்.
தெலங்கானா மக்களுக்கு நியாயமான, நேர்மையான முறையை வழங்க பாஜக தயாராக இருக்கிறது. ஏழைகளுக்கு வீடுகட்டும் பிஎம் ஆவாஸ் யோஜனாவில் ஊழல் நடந்துள்ளது. மத்திய அரசு அனைத்து முயற்சிகள் எடுத்தும் அதற்கு தெலங்கானா அரசு தடை செய்கிறது. தெலங்கானா ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்கவிடாமல் அரசு தடுக்கிறது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்