Patanjali: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளுக்குத் திடீர் தடை: கண் மருந்தால் பார்வை இழப்பு?

Published : Nov 12, 2022, 01:16 PM IST
Patanjali: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளுக்குத் திடீர் தடை: கண் மருந்தால் பார்வை இழப்பு?

சுருக்கம்

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் 5 விதமான மருந்துகளுக்குத் தடைவிதித்து உத்தரகாண்ட் ஆயுர்வேதிக் மற்றும் யுனானி சேவை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் 5 விதமான மருந்துகளுக்குத் தடைவிதித்து உத்தரகாண்ட் ஆயுர்வேதிக் மற்றும் யுனானி சேவை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திவ்ய மதுகிரித்தி, திவ்ய ஐகிரிட் கோல்ட், திவ்ய தைரோகிரிட், திவ்ய பிபிகிரிட், திவ்ய லிடிடம் ஆகிய 5 மருந்துகளின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த  வேண்டும் என்று பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரகாண்ட் ஆயுர்வேதிக் மற்றும் யுனானி சேவை ஆணையத்தின் அங்கீகார அதிகாரி மருத்துவர் ஜிசிஎஸ் ஜங்பாங்கி உத்தரவிட்டுள்ளார்.

தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை கட்டம் கட்டும் பாஜக! ஜனசேனா, டிடிபியுடன் கூட்டணிக்கு ‘மாஸ்டர் பிளான்’

இந்த மருந்துகள் டிரக் அன்ட் மேஜிக் ரெடமிடிஸ் சட்டத்துக்கு முரணாக இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என உத்தரகாண்ட் ஆயுர்வேதிக் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 5 மருந்துகளுமே நீரிழிவு, கண் பாதிப்பு, தைராய்டு, ரத்தக் கொதிப்பு, கொழுப்புச் சத்து ஆகியவற்றுக்காக வழங்கப்படும் மருந்தாகும்.

இது குறித்து உத்தரகாண்ட் ஆயுர்வேதிக் மற்றும் யுனானி சேவை ஆணையத்தின் அங்கீகார அதிகாரி மருத்துவர் ஜிசிஎஸ் ஜங்பாங்கி கூறுகையில் “திவ்ய மதுகிரித்தி, திவ்ய ஐகிரிட் கோல்ட், திவ்ய தைரோகிரிட், திவ்ய பிபிகிரிட், திவ்ய லிடிடம் ஆகிய 5 மருந்துகளின் கலவை குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை நியமித்துள்ளோம் ஒரு வாரத்தில் அறிக்கை அளிப்பார்கள். மறு உத்தரவு வரும்வரை இந்த 5 மருந்துகளின் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

5வது முறையாக பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்

கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் கே.வி.பாபு என்பவர் அளித்த புகாரின் அடிப்பையில் உத்தரகாண்ட்ஆயுர்வேதிக் மற்றும் யுனானி சேவை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர் அளித்த புகாரில் “பதஞ்சலி நிறுவனம் அளித்த விளம்பரத்தில் அவர்கள் தயாரிப்பான கண் சொட்டுமருந்தால், க்ளாகுமா, காட்ராக்ட் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் சரியாகும் எனத் தெரிவித்திருந்தார்கள். இந்த மருந்தை இந்த நோய்களுக்குப் பயன்படுத்தினால், கண் பார்வையிழப்பு நேரிடும். இதுபோன்ற விளம்பரங்கள் மனித உயிருக்குஆபத்தானவை” எனத் தெரிவித்திருந்தார்.

கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு பாதுகாப்பு நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆனால், இதற்கு பதஞ்சலி நிறுவனம் அளித்த பதிலில் “ திவ்யா பார்மசி சார்பில் தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் தரத்துடனும், அரசு வழங்கிய தரக்கட்டுப்பாட்டுடனும் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ உலகில் குழப்பத்துடனும், அச்சத்துடனும் வர்த்தகத்தை செய்பவர்களால் நாங்கள் தாக்கப்படுகிறோம். ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிராக ஒரு மாபியா கும்பல் செயல்படுகிறது தெளிவாகத் தெரிகிறது. இந்த சதியை நாங்கள் தொடர்ந்து வளரவிடமாட்டோம்”எ னத் தெரிவித்துள்ளது.


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!