KCR MODI:தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை கட்டம் கட்டும் பாஜக! ஜனசேனா, டிடிபியுடன் கூட்டணிக்கு ‘மாஸ்டர் பிளான்’

By Pothy Raj  |  First Published Nov 12, 2022, 12:43 PM IST

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பாஜக மாஸ்டர் பிளான் வகுத்து வருகிறது. 


தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பாஜக மாஸ்டர் பிளான் வகுத்து வருகிறது. 

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைக்கும் பேச்சு நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tap to resize

Latest Videos

இந்தக் கூட்டணி தெலங்கானாவில் மட்டும் அல்ல, ஆந்திர மாநிலத்திலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றவும் இதே கூட்டணி தேர்தலில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

5வது முறையாக பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்

ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான் சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோது, கூட்டணி தொடர்பாக பேச்சு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுடனும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடனும் பவன் கல்யானுக்கு நல்ல நட்புறவு இருப்பதால் கூட்டணிக்கு அதிகபட்ச சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 412 வேட்பாளர்கள் போட்டி

ஆனால், பாஜகவும், தெலங்குதேசம் கட்சிக்கும் இடையே 2019ம் ஆண்டு கூட்டணியில் பிளவு ஏற்பட்டபின் இரு கட்சிகளும் ஒதுங்கியே உள்ளன. ஆனால் பவன் கல்யான் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபின், பாஜக, தெலங்குதேசம் இடையிலான நட்புறவு மீண்டும் மலரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் தெலங்கானாவில் உள்ள தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களை தாய்கழகம் திரும்புங்கள் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின், அந்த மாநிலம் பக்கம் கவனத்தை திருப்பாமல் சந்திரபாபு நாயுடு இருந்து வந்தார். ஆனால், பவன் கல்யான், பிரதமர் மோடி இடையிலான சந்திப்புக்குப்பின், தெலங்கானா பக்கம் தனது கவனத்தை சந்திரபாபு நாயுடு திருப்பத் தொடங்கியுள்ளார்.

பாஜக தலைவர்கள் கூறுகையில் “ தெலங்கனா, ஆந்திர மாநிலங்களில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

பாஜகவுக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே 2019ம் ஆண்டு கூட்டணி முறிந்தபின் இருகட்சிகளும் தேர்தல்கள் அனைத்திலும் தனித்து போட்டியி்ட்டன. ஆனால், தெலங்கானாவில் உள்ள தெலங்கு தேசம் கட்சியினர், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தலைவர் சந்திரபாபு நாயுடுவை வலியுறத்தியுள்ளனர்.

கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு பாதுகாப்பு நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதற்கு ஏற்றார்போல், பவன் கல்யானும் பிரதமர் மோடியுடன் பேசி நட்புறவு கொண்டுள்ளார். பவன் கல்யானும், சந்திரபாபு நாயுடுவும் நெருங்கி நண்பர்கள் என்பதால் வரும் சட்டப்பேரவை மற்றும் பொதுத் தேர்தலில் பாஜகவுடன் இரு கட்சிகளும் கூட்டணியில் இணையலாம் எனத் தெரிகிறது

தெலங்கானாவில் தெலுங்குதேசம் கட்சிக்கு 5 முதல் 8சதவீதம் வாக்குகள் உள்ளன, கம்மம் தொகுதியில் டிடிபி கட்சி வலுவாக இருக்கிறது, கிரேட்டர் ஹைதராபாத் தொகுதியிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக, டிடிபி கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுஅமோக வெற்றி பெற்றன, ஆனால், 2019ல் தனித்தனியாக இரு கட்சிகளும் போட்டியிட்டு பெரிய வெற்றியைப் பெறவில்லை.

2014ல் டிடிபி கட்சி 15% வாக்குகள் பெற்று 15 தொகுதிகளில் வென்றது, பாஜக 5 தொகுதிகளில் வென்றது. 
சமீபத்தில் நடந்த முனுகுடே தொகுதியில் டிஆர்எஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக, ஜனசேனா, டிடிபி கட்சிகளை கூட்டணியில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது.
அதற்கு ஏற்றார்போல் பவன் கல்யானும் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், தெலங்கானாவில் 5 மக்களவைத் தொகுதியிலும், 35 சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஜனசேனா போட்டியிடும் என்று அறிவித்தார்.

டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசி வருகிறார். தெலங்கானாவில் ஆட்சியிலிருந்து டிஆர்எஸ் கட்சியை அகற்ற பாஜக மாஸ்டர் பிளானுக்கு தயாராகிவிட்டது.தேர்தல் நெருங்கும்போது கூட்டணி விவரம் தெரியும்

click me!