இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 68 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 68 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த 68 தொகுதிகளிலும் 55 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். 24 வேட்பாளர்கள் உள்பட 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 28,54,945 ஆண் வாக்காளர்களும், 27,37,845 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு பாதுகாப்பு நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 8ம் தேதி, குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணப்படும்போது அன்றைய தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இமாச்சலப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் மக்களுக்கு ஏராளமான சலுகைகளை, இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளன. பொதுசிவில் சட்டம் கொண்டுவருவதற்கான குழு அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
17-வது ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்
இதனால் இரு கட்சிகளிடையே யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில் கடும்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், பலர் பாஜகவில் இணைந்தனர். இதனால் அமைப்பு ரீதியாக காங்கிரஸ் வலுவிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் காங்கிரஸ்கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
இன்று நடக்கும் வாக்குப்பதிவு அனைத்தையும், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மணீஷ் கார்க் ஆன்லைன் மூலம் பார்வையி்ட்டு, கேட்டறிந்துள்ளார். தேர்தலை அமைதியாக நடத்தும் பொருட்டு 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50ஆயிரம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7,884 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 789 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் உள்ளவையாகவம், 397 வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கம்: பினராயி அரசு அதிரடி
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து வாக்களித்து வருகிறார்கள். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் மக்கள் நீண்டவரிசையில் நின்று, அரசின் அடையாளஆவணங்களுடன் வந்து வாக்களித்து சென்றனர்.
லாஹவுல் ஸ்பித் மாவட்டத்தில் உள்ள மிக உயரமான, 15,256 அடி உடரத்தில் உள்ள தாஷிகாங், காசா பகுதிகளில் வாக்குப்பதிவு மையத்தை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இங்கு 52 வாக்களர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் 75.70 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.