KCR Telangana: 5வது முறையாக பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்

By Pothy Raj  |  First Published Nov 12, 2022, 9:57 AM IST

தெலங்கானா மாநிலத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை 5வது முறையாக வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க உள்ளார்.


தெலங்கானா மாநிலத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை 5வது முறையாக வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க உள்ளார்.

தெலங்கானாவில் உள்ள ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயணத் தொழிற்சாலையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஹைதராபாத் வரஉள்ளார்.  ஆனால், இந்த முறையும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

Tap to resize

Latest Videos

இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 412 வேட்பாளர்கள் போட்டி

1.    கொரோனா காலத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வந்தபோதும் அவரை வரவேற்க முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. 

2.    சமத்துவத்துக்கான சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தபோது, அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் முதல்வர் கேசிஆர் தவிர்த்துவிட்டார். 

3.    ஐசிஆர்எஸ்ஏடி-யின் 50வது ஆண்டுவிழாவுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. 
4.    பாஜகவின் செயற்குழுக் கூட்டம் தெலங்கானாவில் நடந்தபோதெல்லாம் அங்கு பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் கே.சிஆர் செல்லவில்லை. 

5.    5வதுமுறையாக இன்று வரும் பிரதமர் மோடியை வரவேற்கவும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செல்லாமல் தவிர்க்க உள்ளார். 

இந்திய கடற்படையின் முதல் பாய்மரப் பயிற்சிக் கப்பல் ஐஎன்எஸ் தரங்கிணி… இன்று வெள்ளி விழா கொண்டாட்டம்!!

தெலங்கானா அரசின் கொறடா பால்கா சுமன் கூறுகையில் “ பிரதமர் வருகிறார் என்றால் அதுதொடர்பாக அழைப்பு முதல்வர் அலுவலகத்துக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பும். ஆனால், அதுபோல் எந்த அழைப்பும் வரவில்லை. சிறப்பு விருந்தினராக மட்டுமே முதல்வரை பிரதமர் அலுவலகம் அழைத்துள்ளது.

ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயனம் தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் அந்த அமைச்சகம் மட்டுமே முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி இதற்கு முன் 3 முறை தெலங்கானா வந்திருந்தும் முதல்வருக்கு அழைப்பு விடுக்காமல் அவமதித்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இன்று பெகும்பேட்டை விமான நிலையம் வந்தபின் அங்கிருந்த 5 கிலோ மீட்டர் தொலைவில், பத்ராச்சலம்-சாத்துப்பள்ளி சாலையில் உள்ள ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயனத் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

பாரத் ஜோடோ நடைபயணத்தில் தஞ்சை காங்கிரஸ் தொண்டர் லாரி மோதி பலி: ராகுல் காந்தி இரங்கல்

இந்த நிகழ்ச்சிக்கு வரும் பிரதமர் மோடியை விமானநிலையத்தில் வரவேற்கவும் முதல்வர் கே சந்திரசேகர் ராவ் செல்லமாட்டார், நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மே மாதம் பேகும்பேட்டைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, டிஆர்எஸ் கட்சியையும், முதல்வர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்தார். இந்த முறையும், பாஜக கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுவார் எனத் தெரிகிறது. 

டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில் “ கடந்த ஜூன் மாதம் பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி வந்தபோது முதல்வர் கேசிஆர் வரவேற்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறுகிறார்கள். பிரதமர் வருகை என்பது அரசியல்ரீதியானது. அப்போது வரவேற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் ராமகுண்டம் உரத் தொழிற்சாலை தொடக்கம் என்பது அரசு நிகழ்ச்சி இதில் முதல்வரை அழைக்காமல் அவமதித்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தனர்
 

click me!