ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள இந்திய ராணுவத்தின் புதிய முகாம் மீது திங்கள்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா கவாஸ் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் புதிய முகாம் மீது திங்கள்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்ததால், துப்பாக்கிச் சண்டை நடந்து தொடர்ந்து வருகிறது.
" ரஜோரியில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது" என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சுனீல் பார்ட்வால் கூறினார். மேலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
undefined
இன்று அதிகாலை 3:10 மணியளவில் ரஜோரியின் குந்தாவில் உள்ள கிராம பாதுகாப்புப் படை (VDC) உறுப்பினரின் வீட்டை பயங்கரவாதிகள் தாக்கியதாகவு அருகில் இருந்த ராணுவப் பிரிவினர் பதில் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல்..
சமீபத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிட இருந்து சௌரிய சக்ரா விருது பெற்ற பர்ஷோத்தம் குமாரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் அவரது மாமா, விஜய் குமார் காயமடைந்தார், மேலும் ஒரு கால்நடை இறந்தது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை, துணை ராணுவப் பிரிவினருடனான கூட்டுப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பாய்வு செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். ஜடான் பாடா கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாதிகள் அரசுப் பள்ளியில் இருந்த தற்காலிக முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த ஒரு ராணுவ வீரர் ஹெலிகாப்டர் மூலம் உதம்பூர் கட்டளை மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டார்.
அதே போல் ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள சாவடியில் புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வியாழன் காலை நடத்திய சோதனையில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஜம்முவின் 6 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் பணியாளர்கள், ஒரு கிராமப் பாதுகாப்புக் காவலர் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளர்ன். 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் இதில் கொல்லப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தோடா மாவட்டத்தில் அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கதுவா மாவட்டத்தின் மச்சேடி வனப் பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 5 ராணுவ வீரமரணம் அடைந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.