மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் செய்யும் போது, கழுத்தில் கயிறு இறுகியதால் 11 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் அடுத்தடுத்த இறப்புகள் தொடர்வதால் உடனடி நடவடிக்கை தேவை என ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன், சினிமா பாணி ஸ்டண்டைப் போன்று சமூக வலைதளத்தில் ரீல்ஸ்-ஐ உருவாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் கூடிய சிறுவர்கள், விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ரீல்ஸ் எடுக்கும் போது ஒரு சிறுவன் சண்டைக் காட்சியை எடுப்பதாகக்கூறி தனது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டியதாக கூறப்படுகிறது.
அச்சிறுவன் நடிப்பதை மற்ற சிறுவர்கள் படிம்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சிறுவன் கழுத்தில் கயிறு இறுகியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மற்ற சிறுவர்கள், அதை ஒரு சாதாரண நடிப்பு எனக் கருதி சிறுவன் சரியும் வரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இறுதியில் சிறுவன் உடம்பில் அசைவுகள் நின்றவுடன் மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
undefined
தகவலறிந்து ஓடி வந்த சிறுவன் குடும்பத்தினர் சிறுவனை மீட்டு அம்பாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் கிடந்த போனை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில், இதோபோல் ரசிகர்களை கவர மலை உச்சியில் ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலம் 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நாய் வசிக்கும் இடத்தில் வாழும் புலம்பெயர் தொழிலாளி! அதிர்ச்சி அளிக்கும் கேரளாவின் அவல நிலை!