இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதில் இ-வாலட்கள் முக்கியப் பங்காற்றுவதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, இ-வாலட்களை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தீவிரக் கண்காணப்பில் வைத்துள்ளது.
இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதில் இ-வாலட்கள் முக்கியப் பங்காற்றுவதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, இ-வாலட்களை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தீவிரக் கண்காணப்பில் வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு வழக்குகளை ஆராய்ந்து பார்த்ததில் அந்த வழக்குகளின் சதித்திட்டங்களுக்கான நிதி இ-வாலட்கள் மூலமே கிடைத்துள்ளதையடுத்து கண்காணிப்பை என்ஐஏ தீவிரப்படுத்தியுள்ளது.
பல்வேறு தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், தங்களுக்குத் தேவையான பணத்தை பல்வேறு வாலட்கள் மூலம் சிறிது, சிறிதாகப் பெற்றுள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிலும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடைக்குப்பின் இந்த கண்காமிப்பை ஏஎன்ஐ தீவிரப்படுத்தியுள்ளது.
இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு
சமீபத்தில் ஒரு வழக்கில் என்ஐஏ அமைப்பால் கைது செய்யப்பட்ட மோஸின் அகமது என்பவருக்கு நிதியுதவி இந்தியாவிலும்,வெளிநாட்டிலும் இருந்து இ-வாலட்கள் மூலம் கிடைத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு வழிகளில் இருந்தும், பெரிய நிறுவனங்களில் இருந்தும் பணம் கிடைத்துள்ளது. அந்த நபருக்கு பணம் அனுப்பியவர்களை தற்போது என்ஐஏ தீவிரமாகத் தேடி வருகிறது
ஒரு சிறிய கால இடைவெளியில் சிறிது, சிறிதாக பல்வேறு முறைகளில் பணம் ஒரு குறிப்பிட்ட இ-வாலட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு கிடைத்த பணம் சிறிது சிறிதாக இ-வாலட்கள் மூலம்தான் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தின் மூலம்தான் ஐஇடி வெடிபொருட்களை வாங்கியுள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியாவுக்கும் ஏராளமான நிதியுதவி இ-வாலட்கள் மூலம்தான் கிைடத்துள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், பல்வேறு வழிகளில் நிதியுதவியை இ-வாலட்கள் மூலம்தான் பெற்றுள்ளதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி வீடியோ வெளியீடு: குஜராத்தில் பிரச்சாரம் முடிந்தது: 5ம் தேதி 2ம் கட்ட தேர்தல்
ஜம்மு காஷ்மீரிலும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள், நிதியுதவி வழங்கியவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களுக்கு நிதியுதவி பல்வேறு நாடுகளில் உள்ள ஆதரவாளர்கள், அனுதாபிகள் மூலம் இ-வாலட்கள் வழியாகவே கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறுகையில் “ஏராளமான தீவிரவாத வழக்குகளில் குற்றவாளி இ-வாலட்களையே பயன்படுத்தியுள்ளார். இவாலட் நிறுவனத்திடம் விசாரணை நடத்தினால் நாங்கள் விதிகளை முறையாகப் பின்பற்றியுள்ளோம், பணம் வரும மூலத்தை அறிய முடியாது. இவாலட் முறையாக வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்டுள்ளதுஎ னத் தெரிவித்தனர். குற்றவாளிக்கு பல மாதங்களாக இவாலட்களில் பணம் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் அந்தப் பணத்தை எடுத்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
இ-வாலட்கள் பெரும்பாலும் தீவிரவாத நிதியுதவிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இவாலட்கள் எளிதாகப் பயன்படுத்தலாம், ஒருவருக்கு எளிதாகப் பணம் அனுப்பலாம், கிரிப்டோகரன்ஸி வாங்கலாம். ஆனால், சிறிய தொகையைக் கூட எங்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது எனக் கண்டுபிடிப்பது கடினம்.
குஜராத் தேர்தல்:அகமதாபாத்தில் மக்களோடு வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்
இந்த இவாலட்கள் மூலம் பல்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கரன்ஸியாக நிதியுதவி பெறப்பட்டு அது இந்திய ரூபாய்க்கு மாற்றப்படுகிறது. ஆனால் ரொக்கப்பணமாக இருந்தால் பணம் அனுப்புவதும், பெறுவதும் கடினம்”எ னத் தெரிவித்தார்
உலகில் உள்ள தீவிரவாத அமைப்புகளான அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ், அல் குவாசம் உள்ளிட்டவை தங்களின் பரிமாற்றத்துக்கு பெரும்பாலும் கிரிப்டோகரன்ஸிகளையே பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.