குஜராத்தில் நடந்துவரும் 2வது கட்டத் தேர்தலில், பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி, வாக்களித்தார்.
குஜராத்தில் நடந்துவரும் 2வது கட்டத் தேர்தலில், பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி, வாக்களித்தார்.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ம்தேதி 89 தொகுதிகளுக்கு நடந்தது. இந்நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் வாக்களித்து வருகிறார்கள். அகமதாபாத் நகரில் உள்ள ராணிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பிரதமர் மோடி காலை 9.30 மணிக்கு வந்தார்.
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார். வாக்களித்தபின் தனது விரலில் மை வைக்கப்பட்டதை காண்பித்து, அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக குஜராத் தேர்தலில் வாக்களிக்க வந்திருந்த பிரதமர் மோடி, தனது தாய் ஹிராபென் மோடியை(heeraben modi) வைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அகமதாபாத்தில் நகரில் உள்ள நாரன்புரா பகுதியில் உள்ள நகராட்சி மையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களிக்க உள்ளார்.
முதல் கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளில், 63 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. 2-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் 285 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். இந்த தேர்தலுக்காக மொத்தம் 14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.13 லட்சம் அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மொ்தம் 2.51 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
இந்த 2ம் கட்டத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 93 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாரதிய பழங்குடி கட்சி 12 வேட்பாளர்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 44 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது.
முதல்வர் பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதி, ஹர்திக் படேல் போட்டியிடும் விராம்கம் தொகுதி, காந்திநகர் தெற்கில் அல்பேஷ் தாக்கூர் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதி பெரியகவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி வீடியோ வெளியீடு: குஜராத்தில் பிரச்சாரம் முடிந்தது: 5ம் தேதி 2ம் கட்ட தேர்தல்
காங்கிரஸ் சார்பில் ஜிக்னேஷ் மேவானி, வட்கம் தொகுதியில் போட்டியிடுகிறார், எதிர்க்கட்சித் தலைவர் சுக்ராம் ராத்வா ஜேத்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்