ஜல்லிக்கட்டு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

By Narendran SFirst Published Dec 4, 2022, 11:59 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முன்னதாக உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த 1 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறித்தும் உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில், அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு தொடர்பான ஒவ்வொரு விஷயங்களும் முறையாக திட்டமிட்டு மட்டுமே நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ வெளியீடு: குஜராத்தில் பிரச்சாரம் முடிந்தது: 5ம் தேதி 2ம் கட்ட தேர்தல்

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, விலங்குகள் நலத்துறை, காவல்துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கொண்ட குழு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான இடங்கள் மற்றும் பிற விஷயங்களை முடிவு செய்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரிலேயே ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரில் மட்டுமே களப்பிறக்கப்படுகின்றது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் காளைகளுக்கு உரிய உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 18 மாதங்களுக்கு குறைவான காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல காளை மாடுகளுக்கு சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் எதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறதா?

இதையும் படிங்க: கிராம உதவியாளர் தேர்வின் வினாதாள் கசிவு... ரூ.10,000க்கு விற்பனை செய்ததால் சர்ச்சை!!

அதனுடைய வால் முறிக்கப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் அடக்கப்படக்கூடிய இடம் வெறும் 15 மீட்டர். காளைகள் வெளியேறும் இடத்தில் அதன் உரிமையாளர் அதனை பத்திரமாக மீட்பது ஒரு காலை களத்தில் இருந்து வெளியேறியதற்கு பிறகு தான் மற்ற காளை வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட அனைத்தும் சீராகவும் சமரசம் இல்லாமலும் கடைபிடிக்கப்படும். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும், அதேபோல் வாடிவாசல் பகுதி காளைகள் வெளியேறும் இடம் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் முழுமையாக மாவட்ட நிர்வாகத்தால் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!