உக்ரைன், ரஷ்யா போரின் காரணமாக, உலக உணவு சப்ளையில் ஏற்பட்ட சிக்கலையடுத்து, பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யா போரின் காரணமாக, உலக உணவு சப்ளையில் ஏற்பட்ட சிக்கலையடுத்து, பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சம் மற்றும் விவசாயிகள் நலத்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவழங்கல், உணவுப்பதப்படுத்துதல் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று தி மின்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளவில் உணவு சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், விலைவாசி கடுமையாக உயர்ந்தது, இதனால், உணவுப்பாதுகாப்புத் திட்டம் குறித்து பல்வேறு கவலைகளை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியது.
கோதுமை, பார்லி, உரம் ஆகியவற்றை உலகநாடுகளுக்கு அதிகளவில் சப்ளை செய்யும் நாடுகளாக ரஷ்யா, உக்ரைன் இருக்கிறது.அந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர், இந்தப் பொருட்களின் சப்ளையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி வீடியோ வெளியீடு: குஜராத்தில் பிரச்சாரம் முடிந்தது: 5ம் தேதி 2ம் கட்ட தேர்தல்
இந்தியாவில் போதுமான அளவு விளைச்சல் வரும் நிலையில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.
வேளாண் பொருளாதார வல்லுநரும் வேளாண் விலை மற்றும் செலவு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசோக் குலாத்தி கூறுகையில் “ உணவு தானியங்கள் சேமிப்பு அளவு எல்லைக்கும் குறைவாக நாம் இருக்கிறோம். இதை ஈடுகட்ட அரசு முயற்சித்து வருகிறது. சேமிப்பகத் திட்டத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது நவீன சேமிப்பு கிட்டங்கியாக இருக்கப் போகிறதா அல்லது பழைய முறை பின்பற்றப்படுமா என்பதுதான். பழையமுறை என்றால், ஒவ்வொரு மனிதனும் ஒரு சாக்குப்பையை எடுத்துக்கொண்டு பிரமிடை உருவாக்க வேணடும்.
எந்திரமாக்கப்பட்ட செயல் அமைப்பு மிகவும் வெளிப்படையானது, நவீனமானது. நம்மிடம் 20 லட்சம் டன் தானியங்கள் கூட சேமிப்பில் இல்லை. சேமிப்பு திட்டம் நீண்ட காலமாக செயல்பாட்டில் உள்ளது, இப்போதுதான் அரசாங்கம் அதை செயல்படுத்த முயற்சிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்திய உணவுக் கழகத்தின்படி, இந்திய தானியங்கள் இருப்பு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 2022ம் ஆண்டில் குறைந்துவிட்டது. உணவு தானிய சேமிப்பு அளவும், 8.50 கோடி டன்னில் இருந்து 7.50 கோடி டன்னாகக் குறைந்துவிட்டது. மத்திய அரசு தனது இலவச உணவுதானியத் திட்டத்தை விரிவுபடுத்தி டிசம்பர் 31ம் தேதிவரை நீட்டித்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.3.90 லட்சம் கோடி செலவாகும்