உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முன் திடீரென மசோதாக்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநில அரசுக்கும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிடப்பில் போட்டுவிடுகிறார் என்பது ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதியின் குற்றச்சாட்டு ஆகும்.
கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து அரசியலமைப்பு முட்டுக்கட்டை செய்து வருவதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் தெலுங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் தெலுங்கானா ஆளுநரின் அலுவலகத்தில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு தகவலும் இல்லாமல் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க..உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு
இது குறித்து மீண்டும் மீண்டும் ஆளுநரிடம் நினைவூட்டப்பட்ட போதிலும் அவை கண்டு கொள்ளப்படவில்லை என்று அரசு மனுவில் கூறப்பட்டிருந்தது. தெலுங்கானா அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க சில மணி நேரங்களே இருந்த சூழலில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 3 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியானது.
மீதம் நிலுவையில் உள்ள மற்ற மசோதாக்களின் நிலை குறித்த அறிவிப்பை ஆளுநரின் அலுவலகம், தெலுங்கானா அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் , மூன்று அவரது தீவிரப் பரிசீலனையில் இருந்து வருவதாகவும், மேலும் இரண்டில் அரசிடம் விளக்கங்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணை செய்து கொண்டிருந்தபோது மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் இதனை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். மேலும் இரண்டு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று மசோதாக்கள் மட்டுமே தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நமது அண்டை மாநிலத்தின் ஆளுநர் அங்குள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சம்பவம் மிக முக்கியமானது என்று அரசியல் நோக்கர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
இதையும் படிங்க..நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி