BJP election campaign song: இனி நாட்டு நாட்டு கிடையாது... “மோடி மோடி தான்” - பாஜகவின் தேர்தல் பிரச்சார பாடல்

By Raghupati R  |  First Published Apr 11, 2023, 6:43 PM IST

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக அவர்களின் பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளார்கள்.


கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

Latest Videos

ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.  முக்கியமான கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை நேரடியாகவும், நடைமுறையாகவும் சென்றடைவதில் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்கள்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக ஒன்றை செய்துள்ளார். தெலுங்குப் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இருந்து ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை  ரீமிக்ஸ் செய்து ட்வீட் செய்துள்ளார். இந்த பாடல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) கட்சியின் இளைஞர் பிரிவின் யோசனை என்று அவர் கூறினார்.

பாடலில் உள்ள நாட்டு நாட்டு பாடல் வரிகள், மோடி மோடி என்று மாற்றப்பட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை கூறுமாறு வலியுறுத்தி உள்ளார்கள். சிவமோகா விமான நிலையம், பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலை, மெட்ரோ பாதைகள் மற்றும் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பாஜக அரசின் நலத்திட்டங்கள் போன்ற திட்டங்களை மையமாக வைத்து பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே சுதாகர் அந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, “இந்த அற்புதமான பாடலின் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சித் திருவிழாவை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம். பிரதமர் மோடியின் சாதனைகள் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க உள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சி ஆஸ்கார் விருது பெற்ற பாடலை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2009 ஆம் ஆண்டில், ஸ்லம் டாக் மில்லியனரில் ‘ஜெய் ஹோ’ பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோது, காங்கிரஸ் கட்சியும் அந்தப் பாடலை ‘ஜெய் ஹோ காங்கிரஸ்’ என்று ரீமிக்ஸ் செய்து பொதுத் தேர்தலின் போது அதைத் தங்கள் தேர்தல் பிரச்சாரப் பாடலாக விளம்பரப்படுத்தியது. இருப்பினும், பின்னர் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து அப்பாடலை நீக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி

click me!