மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தால் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் பணம் வழங்கப்படும் என முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி அறிவித்துள்ளார்.
மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தால் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் பணம் வழங்கப்படும் என முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.6000 நிதி உதவி பெறுவது எப்படி? விவரம் இதோ
மேலும் பிரச்சாரத்தின் போது அனைத்து கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். மேலும் பல கவர்ச்சிகரமான திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் மாதம் ஊக்கத்தொகை என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி
இந்த நிலையில் கோலார் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமாரசாமி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தால் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்பொழுது உள்ள காலகட்டத்தில் விவசாயிகளை பெண்கள் திருமணம் செய்ய முன்வராக நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்பதால் தான் இந்த திட்டத்தை கொண்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.