பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி வழங்கி வருகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதற்காக பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தொகை 3 தவணைகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு தவணையிலும் 2000 ரூபாய் அளிக்கப்படுகிறது.
இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கிசான் திட்டத்தின் கீழ் 13 தவணைகளாக 26 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 14வது தவணையாக 2000 ரூபாய் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் இந்த 14வது தவணைத் தொகை செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி 27ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் விடுவிக்கப்பட்டது. இதற்காக கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 16,800 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது.
பாகிஸ்தானைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக இருக்கிறார்கள்: நிர்மலா சீதாராமன் பதில்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் புதிதாக இணைய விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்து பலன் அடையலாம். இந்தத் திட்டத்திற்கான பிரத்யேகமா வடிவமைக்கப்பட்டுள்ள https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்தில் உள்ள Farmers Corner பகுதியின் கீழ் New Farmer Registration என்ற பகுதி உள்ளது. அதற்குள் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவின்போது, ஆதார் அட்டை, நில ஆவணங்கள், குடியுரிமை சான்று, வருமான சான்று, வங்கி கணக்கு விவரம், மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்வது அவசியம்.
71 ஆயிரம் பேருக்கு வேலை! பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி