கட்சி கட்டுப்பாட்டையும் மீறி சொந்தக் கட்சிக்கு சூனியம் வைக்க ஒரு நாள் உண்ணாவிரத்தை துவக்கிய சச்சின் பைலட்!!

Published : Apr 11, 2023, 01:34 PM IST
கட்சி கட்டுப்பாட்டையும் மீறி சொந்தக் கட்சிக்கு சூனியம் வைக்க ஒரு நாள் உண்ணாவிரத்தை துவக்கிய சச்சின் பைலட்!!

சுருக்கம்

ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். 

இன்று காலை 11 மணியளவில் ஷாஹீத் ஸ்மாரக் வந்தடைந்த சச்சின் பைலட் மேடையில் மகாத்மா காந்தி மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோரின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தார். தேசபக்தி பாடல்கள் பின்னணியில் ஒலிக்க மேடையில் அமர்ந்தார். 

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் உண்ணாவிரதத்துக்கு கட்சி தலைமை கடுமையான கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதையும் மீறி இன்று உண்ணாவிரத்தை சச்சின் துவக்கியுள்ளார். கடந்த பாஜக ஆட்சியில் ராஜஸ்தானில் ஊழல் நடந்ததாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தாமல் முதல்வர் அசோக் கெலாட் காலம் கடத்துவதாகவும், இதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்து இருந்தார். ஆனால், இதற்கு கட்சி தலைமை ஒப்புதல் வழங்கவில்லை. கட்சிக்கு எதிரான எந்த செயல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று உண்ணாவிரத்தை சச்சின் துவக்கியுள்ளார். தன்னை சந்திக்க எந்த எம்எல்ஏவும் வர வேண்டாம் என்று சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு புலியைக்கூட காணவில்லை! பந்திப்பூர் போய் ஏமாந்த பிரதமர் மோடி!

உண்ணாவிரதத்துக்கு பின்னணி:
* நடப்பாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மாநிலத்தில் நிலவும் கோஷ்டி சிக்கல்களுக்கு முடிவு கட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கவே இந்த உண்ணாவிரதம் என்று கருதப்படுகிறது. மாநிலத்தில் தொடர்ந்து சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையிலான விரிசல் நீடித்து வருகிறது.

* சச்சின் பைலட்டுடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தாலும் உண்ணாவிரத்தை கைவிடுமாறு கோரவில்லை என்று கூறப்படுகிறது. வசுந்தரா ராஜே ஆட்சியில் நடந்த ஊழல் மோசடிகளுக்கு எதிரான போராட்டமே தவிர, வேறு யாரையும் குறிவைத்து இல்லை என்பதை பைலட் தெளிவுபடுத்தி இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

* அதானி ஊழலுக்கு எதிராக ராகுல் காந்தி போராட்டத்தை கையில் எடுத்து இருப்பதைப் போல,  முந்தைய வசுந்தரராஜே சிந்தியா ஆட்சிக்கு எதிரான ஊழலை பைலட் கையில் எடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மவுன விரத்தை கடைப்பிடிக்க இருப்பதாகவும், எதுவும் பேசப்போவதில்லை என்பதையும் சச்சின் பைலட் தெளிவுபடுத்தியுள்ளார். 

திருப்பதி கோயிலுக்கு 250 ஏக்கர் விவசாய நிலம் நன்கொடை அளித்த பக்தர்

* சஞ்சீவனி ஊழல் வழக்கில் ராஜஸ்தானின் மூத்த பாஜக தலைவர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதல்வர் கெலாட் மீதும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்துள்ளார். 

* உண்ணாவிரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எந்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மாநில தலைமை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் உண்ணாவிரத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  

* ராஜஸ்தான் மாநிலத்திற்கு அசோக் கெலாட் தலைமையிலான அரசு அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருக்கிறது என்றும் இதை வைத்தே அடுத்த தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என்று தலைமை கூறி வருகிறது. அசோக் கெலாட்டிற்கு தலைமை அனைத்து ஆதரவுகளையும் கொடுத்து, பக்க பலமாக இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. 

* ''நானும் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகிறேன். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சச்சின் பைலட் இந்த விஷயத்தை ஏன் எழுப்பவில்லை? துணை முதல்வராக இருந்தபோது அமைச்சரவை கூட்டங்களில் ஏன் எழுப்பவில்லை? சில மாதங்களுக்கு முன் இப்போது ஏன் இந்த விஷயத்தை எழுப்புகிறார்? என்று முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார். 

உண்ணாவிரதம் முடிந்த பின்னரே என்ன க்ளைமேக்ஸ் ராஜஸ்தான் காங்கிரசில் நடக்கவிருக்கிறது என்பது தெரிய வரும்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்