நாளை மறுநாள் (ஏப்ரல் 13) நடக்கும் ரோஜ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றுகிறார்.
ரோஜ்கர் மேளாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனகளில் உள்ள பணிகளுக்குப் புதிதாகப் தேர்வு செய்யபட்ட சுமார் 71,000 பேருக்கு ஏப்ரல் 13ஆம் தேதி பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
வரும் 13 ஏப்ரல், 2023 அன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்வின்போது பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார்.
ரோஜ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான திட்டம் ஆகும். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்த ரோஜ்கர் மேளா திட்டம் முக்கியப் பங்காற்றுவதுடன், தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்குவதாகவும் மத்திய அரசு கருதுகிறது.
ஒரு புலியைக்கூட காணவில்லை! பந்திப்பூர் போய் ஏமாந்த பிரதமர் மோடி!
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பயனாளர்கள் வேலை பெறுகிறார்கள். ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், தபால் உதவியாளர், வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மூத்த வரைவாளர், ஜே.இ / மேற்பார்வையாளர், உதவிப் பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், தகுதிகாண் அதிகாரிகள், PA, MTS, உள்ளிட்ட பல பதவிகளில் பணிபுரிய உள்ளனர்.
பணி நியமன ஆணையைப் பெறும் அனைவருக்கும் கர்மயோகி கையேடு விநியோகிக்கப்படும். கர்மயோகி கையேடு என்பது பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டல் தொகுப்பு ஆகும்.
இதற்கு முன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71,426 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கியது நினைவூட்டத்தக்கது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்த அரசுப் பணிக்குத் தேர்வானவர்களில் பெரும்பாலான பயனாளர்கள் குடும்பத்தில் முதல் முறையாக அரசுப் பணிக்கு வருகிறார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற, தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்பட்டதாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார்.
திருப்பதி கோயிலுக்கு 250 ஏக்கர் விவசாய நிலம் நன்கொடை அளித்த பக்தர்