
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ஹைதராபாத்தில் 400 அடி உயர ஹரே கிருஷ்ணா பாரம்பரிய கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டினார். கோவில்களை உள்ளடக்கிய இந்த கோபுரம் 200 கோடி ரூபாய் மதிப்பில் நார்சிங்கியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில்கள் அமைந்திருக்கும். மாநில அரசு சார்பில், கோவில் கட்டுவதற்கு, 25 கோடி ரூபாய் நன்கொடையாக முதல்வர் அறிவித்தார். ஆன்மீகம், பக்தி நடைமுறைகள் மற்றும் உலகளாவிய அமைதியை இலக்காகக் கொண்ட அமைப்புகளை தெலுங்கானா அரசு ஆதரிக்கிறது என்றும் சந்திர சேகர ராவ் கூறினார்.
இதையும் படிங்க : எந்த சிறப்பு வகுப்பும் இல்லை.. யூ டியூப் வீடியோ மூலம் 2 ரயில்வே வேலைகளை பெற்ற இளைஞர்..
மேலும் பேசிய அவர் “அனைத்து மதங்களும் கோவிலுடன் இணைகின்றன, மதம் உலகளாவியது, மதத்தில் தவறில்லை, மத அறியாமை மற்றும் மத வெறி ஆகியவை நம்மை அச்சுறுத்துகின்றன. மதம் நம்மைத் தவறு செய்யத் தூண்டுவதில்லை. ஆனால் மத முட்டாள்தனம் அனைத்து மனிதர்களையும் பைத்தியக்காரத்தனமாகத் தள்ளுகிறது. மத வெறி பிடித்த மனிதர்கள் மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்கிறார்கள். எந்த மதத்திலும் வன்முறைக்கு இடமில்லை.” என்று தெரிவித்தார்
தெலுங்கானா அரசுக்கு ஹரே கிருஷ்ணா அமைப்பு வழங்கும் ஆதரவு பாராட்டுக்குரியது என முதல்வர் கே.சி.ஆர். தெரிவித்தார். மேலும் “ அக்ஷய பாத்ரா பள்ளி மாணவர்களுக்கு அன்னபூர்ணா மூலம் உணவை வழங்கி வருகிறது. ஒரு நாள் கூட நிற்காமல் ஹைதராபாத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறது. இது அவர்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. அக்ஷய பாத்ரா திட்டத்திற்கு, தெலுங்கானா மக்கள் சார்பாக நன்றி” என்று கூறினார்.
ஹரே கிருஷ்ணா பாரம்பரிய கோபுரம் ஹைதராபாத்தின் மற்றொரு கலாச்சார அடையாளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது தெலுங்கானாவின் பாரம்பரியத்தை காகதீயா கட்டிடக்கலை கூறுகளின் வடிவத்தில் எடுத்துக்காட்டுகிறது. 1,500 பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க, அதிநவீன தொழில்நுட்பத்தின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
கோபுரத்தில் அன்னதான மண்டபமும் உள்ளது, இங்கு வரும் 500 பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் உணவு வழங்கப்படும். ஒரு நூலகம், கல்யாணை ஆடிட்டோரியம், ஐமேக்ஸ் திறந்தவெளி அரங்குகள், கியூ வளாகம், விரிவுரை அரங்குகள் மற்றும் விருந்தினர் அறைகள் ஆகியவை இளைஞர்கள் புரிந்துகொள்ள தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட லேசர் காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
இதையும் படிங்க : நீட் 2023 : மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதனை செய்த அவலம்.. ஆடையை மாற்ற சொன்னதாகவும் தகவல்