
உத்தர பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம், கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ஆணாதிக்கம், பேராசை : குர்ஆன் ஆணையை மீறி முஸ்லிம் பெண்களின் வாரிசுரிமையை பறிக்கும் சகோதரர்கள்..
இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது. இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் 2023 : மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதனை செய்த அவலம்.. ஆடையை மாற்ற சொன்னதாகவும் தகவல்
சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் தான் முதலில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரிவிலக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.