10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Published : Jun 26, 2023, 12:42 PM ISTUpdated : Jun 26, 2023, 12:47 PM IST
10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சுருக்கம்

பீகாரில் பொது இடத்தில் புகைபிடித்த சிறுவன், ஆசிரியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங்கி குமார் என்ற 15 வயது சிறுவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை மதுபன் பகுதியில் தனது தாயாரின் கைபேசியை பழுதுபார்க்கும் கடையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பும் வழியில் ஹர்தியா பாலத்தின் கீழ் தனது நண்பர்களுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற அவரின் பள்ளி ஆசிரியரும், இயக்குனருமான விஜய் குமார் யாதவ், பஜ்ரங்கி குமார் புகை பிடிப்பதை கண்டு கோபமடைந்தார். அந்தச் சிறுவனின் உறவினரான பள்ளியின் ஆசிரியை ஒருவரும் அப்போது அங்கு இருந்துள்ளார். விஜய் குமார் யாதவ் சிறுவனின் தந்தையை அழைத்து, பின்னர் அவரை பள்ளி வளாகத்திற்கு இழுத்துச் சென்றார், அங்கு அவர் மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து பஜ்ரங்கி இரக்கமின்றி அடித்ததாக பஜ்ரங்கியின் தாயும் சகோதரியும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி.. பிரபல தனியார் ஓட்டல் லிப்டில் சிக்கிய ஊழியர்.. இரண்டு துண்டாகி பலி.. நடந்தது என்ன?

ஆசிரியர்கள் பஜ்ரங்கி குமாரை பெல்ட்டால் அடித்ததாகவும் அவர்கள் கூறினர்.பஜ்ரங்கி மயங்கி விழுந்ததும் மதுபானில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் முசாபர்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பஜ்ரங்கியின் கழுத்து மற்றும் கைகளில் ஆழமான காயங்கள் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அவரது அந்தரங்க உறுப்புகளிலும் ரத்தம் கொட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பள்ளியின் இயக்குனர், சிறுவனை ஆசிரியர்கள் அடிக்கவில்லை, என்று, தனது குடும்பத்திற்கு பயந்து விஷத்தை உட்கொண்டதாகக் கூறினார். இதனிடையே சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மோதிஹாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் விஜய் குமார் யாதவ் மற்றும் மற்றொரு ஆசிரியர் ஒருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். 

பஜ்ரங்கி இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளியின் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் கோடை விடுமுறைக்காக வீட்டிற்குத் திரும்பினார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் தொண்டையை அறுத்து, ரத்தத்தை குடித்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!