மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்த அமித் ஷா!!

By Dhanalakshmi G  |  First Published Jun 26, 2023, 11:47 AM IST

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.


பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு இந்தியா திரும்பினார். டெல்லி விமான  நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, இன்று பிரதமரை சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து அமித் ஷா விளக்கம் அளித்தார். 

மணிப்பூரில் நிலைமை முன்னேறி வருவதாக அமித் ஷாவிடம் மணிப்பூர் முதல்வர் என். பைரன் சிங் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து டுவீட் செய்திருந்த பைரன் சிங், ''அமித் ஷா அவர்களின் நேரடி பார்வை மற்றும் மாநில மத்திய அரசுகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக மாநிலத்தில் வன்முறை பெரிய அளவில் கடந்த வாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது'' என்று நேற்று பதிவிட்டு இருந்தார். 

Latest Videos

undefined

இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் போட்ட ட்வீட்.. பிரதமர் மோடியின் பதில் என்ன?

மணிப்பூர் வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு மெய்தி மற்றும் பழங்குடியின மக்களான குக்கி இன மக்களிடையே வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரில் 53 சதவீதம் மெய்தி இன மக்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இம்பால் பகுதியில் வசித்து வருகின்றனர். சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளனர். பழங்குடியின மக்கள், நாகா மக்கள், குக்கி இன மக்கள் என 40 சதவீதம் உள்ளனர். 

அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி..!

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜூன் 24ஆம் தேதி கூட்டி இருந்தார். வன்முறை தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மணிப்பூரின் தற்போதைய நிலைமை குறித்து கூட்டத்தில் விளக்கம் அளித்தனர். 

உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகு குக்கி சமூகத்தை அணுகி பேசுவேன் என்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்து இருந்தார். 

click me!