அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி..!

Published : Jun 26, 2023, 06:46 AM ISTUpdated : Jun 26, 2023, 06:50 AM IST
அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி..!

சுருக்கம்

பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 20-ம் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 20-ம் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசின் சார்பில் அவருக்கு பிரதமர் மோடிக்கு பிரமாண்ட சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- இந்தியாவிற்கு வரும் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. Google நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு

இதனையடுத்து, அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து எகிப்து நாட்டுக்கு தனி விமானம் மூலம் சென்றடைந்தார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசால் சிறப்பான வரவேற்பு அளித்தார். 

இதையும் படிங்க;-  இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை என்னாச்சு.? பாரக் ஒபமாவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளின் வர்த்தக உறவு வலுவடையும் வகையில் இந்த பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது என கூறப்படும் ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி அந்நாட்டு அதிபர் சிசி கவுரவித்தார்.

இதையும் படிங்க;-   பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருது: இதுவரை மோடி பெற்ற அரச விருதுகளின் பட்டியல்!

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர், தொண்டர்கள் வரவேற்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்
வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!