6 இஸ்லாமிய நாடுகள் மீது 26,000 குண்டுகளைப் போட்டது ஒபாமா: நிர்மலா சீதாராமன் பதிலடி

By SG Balan  |  First Published Jun 25, 2023, 11:18 PM IST

இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதிலுக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் பேசிவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்திய முஸ்லிம்கள் குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துகள் குறித்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

இது புளிக்குழம்பா எலிக்குழம்பா! உ.பி. மருத்துவக் கல்லூரி உணவில் செத்துக் கிடந்த எலி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார். இந்தியாவில் சிறுபான்மையினர் மீது பாகுபாடு காட்டப்படுவது குறித்து அவர் கேள்விஇ எழுப்பினார். அதில் பதில் சொன்ன, "இந்தியாவில் சாதி, மதம், பாலினம் போன்ற பாகுபாடுகளுக்கே இடமில்லை” என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பதில் குறித்து செய்தி நிறுவனம் ஒன்று முன்னாள் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் சொன்ன ஒபாபா, பிரதமர் மோடி இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.

மாணவர்களின் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன், முஸ்லிம்கள் அதிகம் வாழும் 6 நாடுகள் மீது சுமார் 26,000 குண்டுகள் வீசி தாக்கியது ஒபாமா அரசு என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 13 வெளிநாட்டு விருதுகளில், 6 விருதுகள் இஸ்லாமிய நாடுகளால் வழங்கப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒபாவின் பேச்சு பாஜகவுக்கு எதிராகத் திட்டமிட்டடு பரப்பட்டும் பொய் பிரச்சாரம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஒபாமாவின் பேச்சு தனக்கு அதிர்ச்சியை கொடுத்து என்றும் குறிப்பிட்ட நிதி அமைச்சர், அவரது குற்றச்சாட்டை மக்கள் நம்புவார்களா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிரதமர் மோடி நாட்டை முன்னேற்றுவதற்காகக் கொண்டுவந்துள்ள வளர்ச்சித் திட்டங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு பேசிவருகிறார்கள் என்றும் குறைகூறியுள்ளார்.

மூட நம்பிக்கையை உடைக்கும் சித்தராமையா! சட்டப்பேரவையில் வாஸ்துவால் அடைக்கப்பட்ட கதவுகள் திறப்பு!

click me!