வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட காரில் இருந்த பெண்ணை ஊர் மக்கள் காப்பாற்றியுள்ளனர். பின்னர் அந்த பெண் இருந்த காரும் மீட்கப்பட்டது.
ஹரியானாவின் பஞ்ச்குலாவில் காகர் ஆற்றில் திடீரென வெள்ளம் வந்தபோது, ஒரு கார் அடித்துச் செல்லப்பட்ட காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்தக் காரில் சிக்கிய ஒரு பெண் உள்ளூர் மக்களால் போராடி மீட்கப்பட்டுள்ளார். அருகில் இருந்த கோவிலுக்குச் சென்ற பெண், கோவிலில் இருந்து திரும்பி வந்து, தனது காரில் அமர்ந்திருந்தபோது, திடீர் வெள்ளம் வந்து காரை அடித்துச் சென்றிருக்கிறது.
கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும், மீட்புக் குழுவினர் வருவதற்குள் கார் வெள்ளப்பெருக்கின் நடுவில் மாட்டிக்கொண்டது.
மூட நம்பிக்கையை உடைக்கும் சித்தராமையா! சட்டப்பேரவையில் வாஸ்துவால் அடைக்கப்பட்ட கதவுகள் திறப்பு!
இதனால் மீட்புக் குழுவினர் அருகில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த காரில் இருந்து உடனடியாக பெண்ணை மீட்க கயிற்றை பயன்படுத்த முடிவுசெய்தனர். உள்ளூர்வாசிகள் கயிற்றை ஒரு கம்பத்தில் கட்டி, பொங்கிப் பாய்ந்த வெள்ள நீருக்கு நடுவே இருந்த காரை அடைந்தனர்.
पंचकूला में पानी के तेज बहाव में महिला कार समेत नदी में बही, लोगों ने रस्सी के सहारे बचाई जान pic.twitter.com/ZoPpjqQVvI
— Uttam Hindu (@DailyUttamHindu)சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்துக்குப் பின் ஊர்மக்கள் அந்தப் பெண்ணைக் காரில் இருந்து பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார் அதிஷ்டவசமாக ஒரு மின்கம்பத்தில் மோதி நின்றது. சரியான நேரத்தில் அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தைரியமாக செயல்பட்டு காருக்குள் இருந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் மீட்புப் படையினரின் உதவியுடன் காரும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதிகளுக்கு சால்வை, மாலை, பூச்செண்டு, பரிசுகள் கொடுக்காதீர்கள்: உயர் நீதிமன்ற பதிவாளர் கண்டிப்பு