Pegasus Case: பெகாசஸ் வழக்கு: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை:விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தகவல்

By Pothy Raj  |  First Published Aug 25, 2022, 1:19 PM IST

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகல் வேவுபார்க்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் அமைத்த தொழில் நுட்பக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகல் வேவுபார்க்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் அமைத்த தொழில் நுட்பக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச நாளேடுகள் செய்தி வெளியிட்டன.

Tap to resize

Latest Videos

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், ஏசியாநெட் நிறுவனர் சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையில் குழுவும், தொழில்நுட்பக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவினர் விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் விவரத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வுஇன்று வெளியிட்டது.

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு; குஜராத், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு 3 பகுதிகளாக தங்களின் அறிக்கையை வழங்கியுள்ளனர். ஒரு பகுதி மேற்பார்வைக் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரனும், 2 பகுதிகள் தொழில்நுட்பக் குழுவும் வழங்கியுள்ளன. விசாரணைக் குழுவினர் மிக நீண்டஅறிக்கையை தயார் செய்து வழங்கியுள்ளனர். 

அதில் ஒருபகுதியில் குடிமக்களின் தனிஉரிமை, அந்தரங்க உரிமையை பாதுகாக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், நாட்டின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்து பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்

தொழில்நுட்பக் குழு அளித்த அறிக்கையில் 29 செல்போன்களை ஆய்வு செய்தோம். அதில் 5 செல்போன்களில் மால்வேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பெகாசஸ் உளவு மென்பொருளா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. 

‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு, தொழில்நுட்பக் குழுவின் விசாரணைக்குஒத்துழைக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பக் குழுவில் சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல், நெட்வொர்க், ஹார்ட்வேர் வல்லுநர்கள் இருந்தனர். பெகாசஸ் மென்பொருள் மூலம் மக்கள் உளவுபார்க்கப்பட்டார்களா என்பதை விசாரித்து, ஆய்வு செய்து, தீர்மானமாக அறிக்கை தரக் கோரப்பட்டது. இந்த தொழில்நுட்பக் குழுவில் நவீன் குமார் சவுத்ரி, பிரபாகரன், அஸ்வின், அனில் குமாஸ்தே ஆகியோர் இருந்தனர். இந்த குழுவை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்த அறிக்கையின் ஒருபகுதி மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரமணா கூறுகையில் “ ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் வழங்கிய 3வது அறிக்கை விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மட்டுமே பதிவேற்றமாகும். முழுமையான அறிக்கை இருக்காது.

cji : nv ramana:தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு: உச்ச நீதிமன்றத்தில் 5 முக்கிய வழக்குகள் விசாரணை

சில மனுதாரர்கள் தொழில்நுட்ப குழுவினர் அளித்த முதல் இரு அறிக்கையின் நகல் கோரியுள்ளனர் அவர்களின் கோரிக்கை பரிசலீக்கப்படும். இந்த விவகாரத்தில் நாளைக்குப்பின் நான் கருத்துத் தெரிவிக்கிறேன். இந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

click me!