ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!

By Pothy Raj  |  First Published Aug 25, 2022, 12:58 PM IST

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!


ஜார்க்ண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியிருப்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலக்கரி சுரங்கத்தை லீசுக்கு விடுவதில் தனக்கு தானே நீட்டித்துக்கொண்டார். இது தேர்தல்விதிமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியது என்று பாஜக குற்றம்சாட்டியது. 

Tap to resize

Latest Videos

Pegasus Case: பெகாசஸ் வழக்கு: மத்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: விசாரணைக் குழு உச்ச நீதிமன்றம் தகவல்

அரசு ஒப்பந்தங்களில் முதல்வரே ஈடுபட்டதால், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 151 பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக முறையிட்டது. இதற்கு ஹேமந்த் சோரன் தரப்பிலும் பதில் அளி்க்கப்பட்டது. இரு தரப்பிலும் கடந்த 12ம்தேதி தங்கள் வாதத்தை முடித்து, கடந்த 18ம் தேதி எழுத்துபூர்வமாக வாதத்தை அளித்தனர். 

அரசியலமைப்புச் சட்டம் 192 பிரிவின்படி எம்எல்ஏ ஒருவரை தகுதி நீக்கம் செய்வதில் குழப்பம், சந்தேம் எழுந்தால், அதுகுறித்து ஆளுநரிடம் விட்டுவிடலாம். ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது.

PMLA judgment: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டம் மறுஆய்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இதன்படி தேர்தல் ஆணையம் தனது அறிக்கையைத் தயார் செய்து ஆளுநர் ரமேஷ் பயாஸுக்கு இன்று காலை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் இந்த அறிக்கையை தேர்தல் குழுவிடம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையம் பரிந்துரை குறித்து ஆளுநர் ரமேஷ் பயாஸ் இன்று மாலைக்குள் முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

இதற்கிடையே ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று அளித்த பேட்டியில், “ என்னை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் எந்த பரிந்துரையையும் ஆளுநருக்கு அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

click me!