பிரதமர் மோடியை டெல்லி குருதுவாரா பாலா சாஹேப் ஜி சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.
பிரதமர் மோடியை டெல்லி குருதுவாரா பாலா சாஹேப் ஜி சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.
பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி குருதுவாரா ஸ்ரீ பாலா சாஹேப் ஜி சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன, அகண்ட பாத் என்ற முகாமையும் 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அகண்ட பாத் நிகழ்ச்சியில் ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர்.
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கட்டாயம்.. யுஜிசி திடீர் உத்தரவின் பின்னணி..
குருதுவாரா சார்பில் அகண்ட பாத் நிகழ்ச்சியை நாட்டின் பிரதமருக்காக ஏற்பாடு செய்வது இதுதான் முதல்முறையாகும். லாங்கர், மருத்து முகமா, ரத்ததான முகம் ஆகியவற்றை ஒருங்கே குருதுவாரா பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்காக நடத்தியது.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் முடிந்ததையடுத்து, குருதுவாராவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் டெல்லியில் 7 லோக் கல்யான் மார்க்கில் அவரைச் சந்தித்தனர். பிரதமர் மோடிக்கு சீக்கியர் அணியும் தலைப்பாகையை அணிவித்து, குருதுவாராவின் பிரசாதங்களை வழங்கி, ஆசி வழங்கினர்.
அதுமட்டுமல்லாமல் சிரோபா எனும் புகைப்படத்தையும் வழங்கி, பிரதமர் மோடியின் ஆரோக்கியம், நீண்டநாள் வாழ்வுக்கும் பிரார்த்தனை செய்தனர்.
ஆபாச வீடியோ விவகாரம்: சண்டிகர் பல்கலைக்கழகம் மூடல்: காப்பாளர் சஸ்பெண்ட்,3 பேர் கைது
குருதுவாரா நிர்வாகிகளைச் சந்தித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது நலனுக்கும், உடல்நலத்துக்கும் பிரார்த்தனை செய்த குருதுவாரா நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
சீக்கிய சமூகத்தில் ஒருபகுதியாக இருப்பதை தாழ்மையுடன் ஏற்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார் சீக்கிய சமூகத்தின் நலனுக்கு மத்திய அரசு தொடர்ந்து உழைக்கும், அதற்கான கடமைப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, சீக்கிய சமூகத்தின் நலனுக்காகவும், மாண்புக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பிரதமர் மோடிக்கு குருதுவாரா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு: எவ்வளவு பணம் கைக்கு கிடைக்கும்?
டிசம்பர் 26ம் தேதியை “ வீர் பால திவாஸ்”என்று பிரதமர் மோடி அறிவித்தார், கர்தார்பூர் சாஹேப் சாலையை திறந்துவைத்தல், குருதுவாரா நடத்தும் லாங்கர்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கம் போன்றவற்றுக்கும், குரு கிரந்த சாபஹேப் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்தடைந்ததற்கும் பிரதமர் மோடிக்கு குருதுவாரா நிர்வாகிகள் நன்றிதெரிவித்தனர்.